உடல் பயிற்சி

அப்டாமினல் க்ரன்சஸ்

பெரும்பாலான பெண்கள் 30 வயதை நெருங்குவதற்குள் வயிறு, இடுப்புப் பகுதிகளில் அதிகத் தசைகளும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகின்றனர். தாய்மை, ஹார்மோன் மாற்றம், உணவு போன்ற காரணங்களோடு போதிய உடற்பயிற்சி இல்லாததும் கொழுப்பு அளவு அதிகரித்து, தசைகள் தளர்வு பெற முக்கியக் காரணம்.
சமச்சீரான உணவோடு, சில அப்டாமினல் பயிற்சிகள் செய்வது, வயிற்றுப் பகுதியில் த‌சைகளை இறுக்கி, உடலை ஃபிட்டாக்கும். பயிற்சியாளரின் துணையுட‌ன் இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது நல்ல ப‌லனைத் தரும். அப்டாமினல் க்ரன்சஸ் (Abdominal Crunches) பயிற்சி வயிற்சி பகுதியை வலுவடையச்செய்யக் கூடியது.

இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் வயிற்று பகுதி அழகான வடிவம் பெறும். இந்த பயிற்சி செய்ய தரையில் மல்லாந்து படுத்து, கால் முட்டிகளை மடக்கியபடி வைக்க வேண்டும். கைகளை மடித்து, தலையின் பக்கவாட்டில் வைக்க வேண்டும். பார்வை மேல் நோக்கி இருக்க வேண்டும். கால்களை நகர்த்தாமல், உடலை முன்புறமாக உயர்த்த வேண்டும். எந்த அள‌வுக்கு முடியுமோ அந்த அள‌வுக்கு உடலை முன்னோக்கிக் கொண்டுசென்று, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்படி 25 முறைகள் செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க வேண்டும்.
பலன்கள்: வயிற்றுப் பகுதி தசைகள் இறுகி, வலுவடையும். முதுகு வலி, குறையும். வயிறு அழகான வடிவம் பெறும்

Related posts

மார்புத் தசையை வலுவாக்கும் பயிற்சிகள்

nathan

இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்

nathan

வியர்வை கொட்டும் அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?

nathan

“எக்ஸ்ட்ரா சதையை எளிதில் குறைக்கலாம்!”

nathan

இடுப்பின் பக்கவாட்டு கொழுப்பை கரைக்க உதவும் பயிற்சிகள்

nathan

15 நிமிடத்தில் இனி தொப்பையை குறைக்கலாம்!

nathan

ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் கணேச முத்திரை

nathan

ரஷ்யன் ட்விஸ்ட் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பயன்கள்

nathan

எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க உடற்பயிற்சி அவசியம்

nathan