1477121144 3633
சிற்றுண்டி வகைகள்

உருளைக்கிழங்கு மசாலா போளி செய்ய சிரமப்பட வேண்டாம் இதோ……..

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 4
கடலை பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு மேஜைக்கரண்டி
முந்திரி பருப்பு – எட்டு
மைதா மாவு – இரண்டு கப்
பச்சை மிளகாய் – ஒன்று
கரிவேபில்லை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கடுகு – ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
நல்லெண்ணெய் – இரண்டு மேஜைக்கரண்டி
நெய் – தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும். அதில், மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

பிறகு, ஒரு உருண்டை எடுத்து வாழை இலையில் தட்டி நடுவில் பூரணம் வைத்து மூடி மறுபடியும் மெல்லியதாக தட்டி, தவாவில் போட்டு சுற்றி நெய் ஊற்றி போளி சுட்டு எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு போளி தயார்.1477121144 3633

Related posts

அவல் தோசை

nathan

சூப்பரான ஜவ்வரிசி வெங்காய ஊத்தப்பம்

nathan

நேந்திரம் பழம் அப்பம்

nathan

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்: தீபாவளி ஸ்பெஷல்!

nathan

தேங்காய்-ரவா புட்டு

nathan

சுவையான… அரிசி சாத கட்லெட்

nathan

ஸ்நாக்ஸ்: மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி

nathan

காலிஃப்ளவர் பஜ்ஜி செய்ய தெரியுமா…!

nathan

நூல்கோல் சேப்பங்கிழங்கு கொழுக்கட்டை

nathan