36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சிற்றுண்டி வகைகள்

ஃப்ரைடு பொடி இட்லி

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – 2 கப்
இட்லிப் பொடி – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

• இட்லி மாவை சிறு சிறு இட்லிகளாக ஊற்றி, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

• கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலையை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து சிறிது உப்பை தூவி, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

• பிறகு வேக வைத்துள்ள சிறு சிறு இட்லிகளை, அத்துடன் சேர்த்து, இட்லிப் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

• இப்போது ஃப்ரைடு இட்லி ரெடி. இட்லி சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

Related posts

பீட்ரூட் ராகி தோசை செய்முறை விளக்கம்

nathan

கோதுமை ரவை வெங்காய தோசை

nathan

கோஸ் பரோத்தா செய்வது எப்படி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் சிக்கன் சமோசா

nathan

கம்பு கொழுக்கட்டை

nathan

புத்துணர்ச்சி தரும் சாத்துகுடி ரைதா

nathan

பிரெட் பனீர் பணியாரம்

nathan

கேனலோனி ஃப்ளாரன்டைன் (இத்தாலி)

nathan

குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு – கம்பு ஃப்ரூட்ஸ் மில்க்

nathan