32.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
201702250906316708 Green peas stuffed chapati SECVPF
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கு சத்தான பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி

காலையில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஒரு காலை உணவு செய்ய நினைத்தால், அதற்கு பச்சை பட்டாணி சப்பாத்தி செய்து கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு சத்தான பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி
தேவையான பொருட்கள் :

பச்சை பட்டாணி – 1 கப்
கோதுமை மாவு – 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
சீரகம் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.

* பச்சை பட்டாணியை கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்த பின், அரைத்து வைத்துள்ள பச்சை பட்டாணி கலவையை சேர்த்து 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் மாங்காய் தூள் சேர்த்து வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

* பின்னர் அந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் தேய்த்து, நடுவே சிறிது பச்சை பட்டாணி கலவையை நடுவில் வைத்து மூடி, மீண்டும் மெதுவாக சப்பாத்தி போல் தேய்க்க வேண்டும்.

* தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும்.

* இப்போது சுவையான பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி!!!201702250906316708 Green peas stuffed chapati SECVPF

Related posts

ஜாலர் ரொட்டி

nathan

பட்டர் முறுக்கு செய்வது எப்படி? எச்சில் ஊற வைக்கும் சுவை

nathan

மட்டன் கொத்து பரோட்டா

nathan

சுவையான மங்களூர் பஜ்ஜி

nathan

தந்தூரி பேபி கார்ன்

nathan

சம்பல் ரொட்டி

nathan

பிரட் பகோடா :

nathan

பனீர் சாத்தே

nathan

சுவையான பன்னீர் சமோசா செய்வது எப்படி

nathan