தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 1 கப்
பச்சரிசி – 1/4 கப்
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
வெல்லம் – 1/2 கப்
ஏலக்காய் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
அரிசி, பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தனித் தனியாக அரைத்து கலந்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணிர் விட்டு கெட்டியான பாகு காய்ச்சி வடிக்கட்டி மாவுடன் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
பொடித்த ஏலக்காய், தேங்காய்த் துருவல் போட்டு நன்கு கலக்கவும். ஒரு கரண்டி மாவு விட்டு தோசையாக வார்க்கவும். இருபுறமும் நெய் விட்டு வெந்தவுடன் எடுக்கவும். சுவையான பாசி பருப்பு இனிப்பு தோசை தயார்.
குறிப்பு:
இதனையே மாவு அரைத்தவுடன் உப்பு சேர்த்து கடுகு, வெங்காயம், பச்சை மிலகாய் நறிக்கிப் போட்டு, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி மாவுடன் கலந்து காரத் தோசையாக சுடலாம்.