31.1 C
Chennai
Monday, May 20, 2024
1487243718 7373
சிற்றுண்டி வகைகள்

ஆப்பம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – இரண்டு டம்ளர்
உளுந்து – 3 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
சாதம் – 1 கப்
சோடா உப்பு – பெரிய பின்ச்
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு ஏற்ப

செய்முறை:

அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து நன்கு அலசி சுமார் 6 மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீர் வடித்து விட்டு சாதம் கலந்து மிக்ஸியில் ஒரு முறை அல்லது இரு முறையாகவோ போட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு, சோடா உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு வைக்கவும். முதல் நாள் மாலை அரைத்தால் மறுநாள் காலை சுட சரியாக இருக்கும்.

குறைந்தது 14 மணி நேரம் மூடி வைக்கவும். மாவு ஒரு ஒன்னரை அல்லது இரண்டு இன்ச் அளவு பொங்கி கலக்கி பார்த்தால் லேசாக இருக்கும். நன்கு கலந்து தோசை மாவை விட கொஞ்சம் இளகுவாக கரைத்து கொள்ளவும்.

ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து நான்ஸ்டிக் ஆப்பச் சட்டி நன்கு காய்ந்த பின்பு மாவை ஊற்றவும். ஆப்பச் சட்டியின் கைப்பிடியை பிடித்து மாவு வட்டமாக பரவுமாறு திருப்பி விடவும். பிறகு மூடி போடவும்.

சுற்றி லேசாக சிவந்து ஆப்பம் வெந்து வரும். கரண்டியை கொண்டு லேசாக சைடில் விட்டால் ஆப்பம் அப்படியே சூப்பராக சட்டியில் இருந்து எழும்பி வரும். எடுத்து சூடாக பரிமாறலாம். நடுவில் ஸ்பாஞ்சாக சுற்றி முறுகலான ஆப்பம் தயார்.1487243718 7373

Related posts

தினை சீரக தோசை

nathan

மாலை நேர டிபன் ரவா கிச்சடி

nathan

சிக்கன் நூடுல்ஸ்

nathan

சுவையான சிக்கன் ஸ்டஃப் ரோல் செய்வது எப்படி

nathan

சுவையான சத்தான கோதுமை ரவை பொங்கல்

nathan

புளிச்சக்கீரை கடையல் செய்வது எப்படி

nathan

மரவள்ளிக்கிழங்கு வடை

nathan

சத்தான கம்பு காய்கறி கொழுக்கட்டை

nathan

காய்கறி காளான் பீட்சா

nathan