30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

சத்து நிறைந்த கேரட் – கம்பு அடை

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சத்து நிறைந்த கேரட், கம்பு வைத்து சுவையான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த கேரட் – கம்பு அடை
தேவையான பொருட்கள் :

கம்பு – 1 கப்
புழுங்கல் அரிசி – அரை கப்
உளுந்து – அரை கப்
வெந்தயம் – 2 ஸ்பூன்
துருவிய கேரட் – 1 ஸ்பூன்
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
கொத்தமல்லி – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

* வெங்காயம். ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கம்பு, அரிசி, உளுந்து, வெந்தயத்தை 4 மணிநேரம் ஊற வைக்கவும்.

* உளுந்து, வெந்தயத்தை தனியாகவும், கம்பு, அரிசியை தனியாகவும் அரைத்து ஒன்றாக கலந்து உப்பு போட்டு 8 மணி நேரம் புளிக்க விடவும்.

* புளித்த மாவில் வெங்காயம், கேரட், ப.மிளகாய், கொத்தமல்லி போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவு அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சத்தான சுவையான கேரட் – கம்பு அடை ரெடி.

Related posts

ஹைதராபாத் ஸ்பெஷல் ஆனியன் சோட்டா சமோசா

nathan

சுவையான வடைகறி செய்ய !!

nathan

வெஜ் கட்லெட் லாலிபாப்

nathan

க்ரான்பெரி பிஸ்தா பிஸ்கட்டை எவ்வாறு தயாரிப்பது? (வீடியோ இணைப்புடன்)

nathan

சூப்பரான கேழ்வரகு வெல்லம் தோசை

nathan

சோளா பூரி

nathan

வாழைப்பூ வடை

nathan

கொய்யா இனிப்பு வடை

nathan

சிவப்பு அரிசி சர்க்கரைப் பொங்கல்

nathan