சிற்றுண்டி வகைகள்

பிரட் முட்டை உப்புமா

தேவையான பொருட்கள்:

பிரட் – 3 துண்டுகள்
முட்டை – 2
பெரிய வெங்காயம் – 1
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
பெருங்காயத் தூள் – சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பிரட்டை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, அத்துடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து அதில் பிரட் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் நன்கு டோஸ்ட் செய்து இறக்கினால், சுவையான பிரட் முட்டை உப்புமா ரெடி!!!

Related posts

ராகி பால் கொழுக்கட்டை

nathan

யுகாதி ஸ்பெஷல் தேங்காய் போளி

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் வாழைக்காய் பஜ்ஜி

nathan

மும்பை ஸ்பெஷல் தவா புலாவ் செய்வது எப்படி

nathan

பாகற்காய் பச்சடி

nathan

சாக்லெட் சுவிஸ் ரோல்

nathan

ஸ்வீட் கார்ன் சுண்டல் செய்வது எப்படி

nathan

சூப்பரான பேல் பூரி சாண்ட்விச்

nathan

காண்ட்வி

nathan