குழந்தைகளுக்கு பேல் பூரி மிகவும் பிடிக்கும். சுவையும், சத்துக்களும் மிகுந்த இந்த பேல் பூரியை வீட்டிலேயே எளிய முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
மாலை நேர ஸ்நாக்ஸ் பேல் பூரி
தேவையான பொருட்கள் :
பொரி – 1 பாக்கெட்
ஓமப்பொடி – 1/4 கிலோ
வெங்காயம், தக்காளி – 2 தலா
வெள்ளரிப் பிஞ்சு – 1
கேரட் – 1
சென்னா – 2 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
சாட் மசாலா – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
கறுப்பு உப்பு – 1/4 டீஸ்பூன்
இனிப்பு சாஸ் தயாரிக்க:
பேரீச்சம் பழம் – 6
வெல்லம் (பொடியாக நறுக்கியது) – 4 டேபிள் ஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – 1 சிட்டிகை
பச்சை சாஸ் தயாரிக்க:
புதினா இலைகள் – 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 4
உப்பு – 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
செய்முறை :
* இனிப்பு சாஸ் தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சிறிது தண்ணீருடன் அரைத்து வடிகட்டவும். அதை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
* பச்சை சாஸ் தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் சிறிது நீருடன் மசிய அரைத்துக் கொள்ளவும்.
* சென்னா, நிலக்கடலை ஆகியவற்றை வேக வைத்து கொள்ளவும்.
* கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெள்ளரி, கேரட்டை துருவிக் கொள்ளவும்.
* பெரிய பாத்திரத்தில் பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, துருவிய வெள்ளரிப் பிஞ்சு, கேரட் ஆகியவற்றுடன் வேக வைத்த சென்னா, நிலக்கடலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
* பிறகு அதனுடன் இனிப்பு சாஸ், பச்சை சாஸ், சாட் மசாலா, கறுப்பு உப்பு, உப்பு சேர்த்து மேலும் குலுக்கி கலக்கவும்.
* அடுத்து அதில் பொரி சேர்த்து மேலும் குலுக்கி கலந்துகொள்ளவும்.
* கடைசியாக அதில் மேல் கொத்தமல்லி தழை, ஓமப்பொடி தூவிப் பரிமாறவும்.