29.1 C
Chennai
Monday, Jun 17, 2024
18 1476773788 2 brushing teeth
ஆரோக்கியம் குறிப்புகள்

பற்களைத் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள்!

நாம் தினமும் செய்யும் பழக்கங்களில் ஒன்று தான் பற்களைத் துலக்குவது. வாய் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம். ஆனால் நம்மில் பலர், குறிப்பாக ஆண்கள் பற்களைத் துலக்கும் போது நிறைய தவறுகளை செய்வார்கள். சொல்லப்போனால் நிறைய ஆண்கள் பற்களைத் துலக்கவே சோம்பேறித்தனப்படுவார்கள்.

ஒருவர் பற்களை சரியாக பராமரிக்காவிட்டால், பற்கள் மஞ்சள் நிறத்திலும், வாய் துர்நாற்றத்தையும் அனுபவிக்கக்கூடும். இதனைத் தவிர்க்க வேண்டுமானால், பற்களைத் துலக்கும் போது செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். இங்கு அந்த தவறுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தவறு #1 நீண்ட நாட்களாக ஒரே டூம் பிரஷைப் பயன்படுத்துவது, வாயில் கிருமிகளின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் ஒரு டூத் பிரஷை 2 மாதத்திற்கு மேல் பயன்படுத்தக்கூடாது. எனவே அடிக்கடி டூத் பிரஷை மாற்றுங்கள்.

தவறு #2
நேரமாகிவிட்டது என்று 1 நிமிடம் கூட பற்களைத் துலக்காமல் இருப்பதால், வாயில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்படாமல் இருந்து, பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே ஒரு முறை பற்களைத் துலக்கினால் 2 நிமிடம் பற்களைத் துலக்க வேண்டும்.

தவறு #3 நிறைய ஆண்கள் பற்களைத் துலக்கிவிட்டு, அப்படியே குளியலறையிலேயே டூத் பிரஷை வைப்பார்கள். இப்படி வைத்தால் டூத் பிரஷில் கிருமிகளின் வளர்ச்சி அதிகரித்து, மீண்டும் அதைப் பயன்படுத்தும் போது வாயில் கிருமிகள் நுழைந்து, பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

தவறு #4 பற்களைத் துலக்கவே சோம்பேறித்தனப்படும் ஆண்கள் எப்படி நாக்கை சுத்தப்படுத்துவார்கள். ஆனால் இப்படி நாக்கை சுத்தம் செய்யாமல் இருந்தால், நாக்கில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, வாய் துர்நாற்ற பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.

தவறு #5 பற்களைத் துலக்கிய உடனேயே நீரால் வாயைக் கொப்பளிப்பதும் தவறான செயல் தான். எனவே பற்களைத் துலக்கிய பின்பு, உடனேயே நீரால் வாயைக் கொப்பளிக்காமல், 15 நிமிடம் கழித்து வாயைக் கொப்பளியுங்கள்.

18 1476773788 2 brushing teeth

Related posts

தெரிந்துகொள்வோமா? கருட புராணத்தின் படி உங்க மரணம் எப்படி இருக்கும் தெரியுமா….?

nathan

கால் மேல் கால் போடலாமா?

nathan

தூசி எரிச்சலை ஏற்படுத்துமா? கட்டுப்படுத்த எளிய குறிப்புகள்

nathan

பழங்களை தோலுடன் சாப்பிடுவது உங்களை பலவகை புற்றுநோய்களில் இருந்து காப்பாற்றுமாம்

nathan

தெரிஞ்சிக்கங்க…மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் கட்டாயம் செய்ய வேண்டியவை!

nathan

தமிழ் நடிகர் நடிகைகளின் ஃபிட்னஸ் ரகசியம்!!!

nathan

உங்களுக்கு நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா?

nathan

கர்ப்பிணிகளே! குழந்தை அறிவாளியா பிறக்கணுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உள்ளாடை பராமரிப்பு எப்படினு தெரியுமா?…

nathan