201701311438451048 What to expect in the husband and wife SECVPF
மருத்துவ குறிப்பு

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குடும்பத்தில் மகிழ்ச்சி நிகழ என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குடும்பத்தில் மகிழ்ச்சி நிகழ என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.

1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது.
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா,தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.201701311438451048 What to expect in the husband and wife SECVPF

Related posts

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த காளான் சாப்பிட்டா பெண்களுக்கு குழந்தை சீக்கிரம் உண்டாகுமாம்…!

nathan

தெரிஞ்சிக்கங்க…குடலில் உள்ள கழிவுகளை சுலபமாக வெளியேற்றணுமா? இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க….

nathan

இரும்பு சத்து உள்ள உணவுகள்

nathan

ஆஸ்துமா இருக்கா? சரியா மூச்சுவிட முடியலையா? பிரச்சனைக்கான தீர்வுதான் இது.!

nathan

மூட்டுவலியை குணமாக்கும் கருடன்கிழங்கு!

nathan

ஒமிக்ரானின் தீவிரம் பயன்படுத்தும் துணி மாஸ்க் பாதுகாப்பானதா?

nathan

செல்போன் மூலம் ஆண்களிடம் பெண்கள் சொல்லக்கூடாத 10 விஷயங்கள்..!

nathan

உங்களுக்கு தெரியுமா இளமையை காக்கும் துளசி…இன்னும் பல நோய்களை தீர்க்கும்!

nathan