28.7 C
Chennai
Saturday, Jul 26, 2025
201701300906049558 Carrot and Cashew Adai SECVPF 1
சிற்றுண்டி வகைகள்

சத்து நிறைந்த கேரட் – முந்திரி அடை

குழந்தைகளுக்கு தினமும் கேரட், முந்திரி கொடுப்பது உடலுக்கு நல்லது. இன்று கேரட், முந்திரி வைத்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த கேரட் – முந்திரி அடை
தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு – 1 கப்
கடலை பருப்பு – அரை கப்
காய்ந்த மிளகாய் – 3
அரிசி – 2 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
கேரட் துருவல் – கால் கப்
முந்திரி – தேவையான அளவு
நெய் – தேவைக்கு

செய்முறை :

* முந்திரி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாயை நீரில் 1 மணிநேரம் ஊற வைக்கவும்.

* ஊறவைத்த பருப்பு, அரிசியை மிக்சியில் போட்டு பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த மாவில் உப்பு, கேரட் துருவல், கொத்தமல்லி போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு கரண்டு மாவை சற்று தடிமனாக ஊற்றி அதன் நறுக்கிய முந்திரியை மேலே தூவி கைகளால் அழுத்தி விட்டு சுற்றி நெய் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

* சத்து நிறைந்த கேரட் – முந்திரி அடை ரெடி.201701300906049558 Carrot and Cashew Adai SECVPF

Related posts

நார்த்தம்பழ சேமியா ரவா கிச்சடி

nathan

அவல் – பொட்டேட்டோ மிக்ஸ்

nathan

ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான இட்லி சாட்

nathan

சத்தான கோதுமை ரவை உப்புமா

nathan

உருளைக்கிழங்கு பொரியல்

nathan

ஜிலேபி,

nathan

நட்ஸ் டிரைஃப்ரூட்ஸ் ரிச் லட்டு

nathan

சுவையான அவல் உப்புமா

nathan