சிற்றுண்டி வகைகள்

சத்தான சுவையான வெந்தயக்கீரை தோசை

அதிகளவு சத்துக்கள் நிறைந்த வெந்தயக்கீரை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இபோது வெந்தயக்கீரை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான வெந்தயக்கீரை தோசை
தேவையான பொருட்கள் :

வெந்தய கீரை – 2 கப்,
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 1
தோசை மாவு – தேவையான அளவு,
தேங்காய் துருவல் – சிறிதளவு,
நெய் – சிறிதளவு
உப்பு – தேவைக்கு

செய்முறை :

* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் வெந்தயக்கீரையை போட்டு வதக்கவும்.

* வெந்தயக்கீரை பாதியளவு வெந்ததும் அதில் தேங்காய் துருவல் சிறிது உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

* தோசை மாவில் வதக்கிய கீரையை போட்டு நன்றாக கலக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசையாக ஊற்றி சுற்றி சிறிது நெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேண்டும்.

* சூப்பரான சத்தான வெந்தயக்கீரை தோசை ரெடி.

Related posts

ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு

nathan

சுவையான தினை உருளைக்கிழங்கு கட்லெட்

nathan

இறால் கட்லெட்

nathan

வடகறி–சமையல் குறிப்புகள்!

nathan

ஹைதராபாத் ஸ்பெஷல் ஆனியன் சோட்டா சமோசா

nathan

வாழைப்பழ சப்பாத்தி

nathan

செட் தோசை

nathan

கேரமல் கஸ்டர்டு புட்டிங் செய்வது எப்படி

nathan