28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
2T26iIU
சிற்றுண்டி வகைகள்

வெஜிடபிள் பாட் பை

என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு – 1
கேரட் – 1
காலிஃபிளவர் – 8 சிறு துண்டுகள்
பீன்ஸ் – 4
பச்சைப் பட்டாணி – 1/4 கப்
ஸ்வீட் கார்ன் – 1/4 கப்
வெங்காயம் – 1
பூண்டு – 3 பல்
பால் – 1 கப்
கொத்தமல்லி இலை – 2 டேபிள்ஸ்பூன்
கருப்பு மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
டிரைட் ஹெர்ப்ஸ் – 1/4 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
உப்பு – தேவைக்கேற்ப.
மேல் மாவுக்கு…
மைதா – 1/2 கப்
வெண்ணெய் – 1/4 கப்
குளிர்ந்த நீர் – தேவைக்கேற்ப
உப்பு – ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

மேல் மாவுக்குத் தேவையான மாவை, பாத்திரத்தில் போட்டு, ஃப்ரீசரில் வைக்கவும். ஒரு ஃபோர்க்கையும் (fork), வெண்ணெயையும் ஃப்ரீசரில் வைக்கவும். தேவையான காய்கறிகளை பொடியாக வெட்டிக் கொள்ளவும். பூண்டு, கொத்தமல்லி, வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு பானில், வெண்ணெய் சேர்த்து, பிரியாணி இலை, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், கேரட், பீன்ஸ், பட்டாணி, கார்ன் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, மேலும் ஒரு நிமிடம் வதக்கவும். பால் சேர்த்து, மிதமான தீயில், மூடி வேக விடவும். காய்கறிகள் வெந்ததும், கருப்பு மிளகுத் தூள், டிரைட் ஹெர்ப்ஸ் சேர்த்து இறக்கி மூடி வைக்கவும். அவனை (oven) 200 deg C ப்ரீ ஹீட் செய்யவும். ஃப்ரீசரில் வைத்த மாவை எடுத்து, வெண்ணெயை சிறு துண்டு களாக வெட்டி, மாவில் சேர்க்கவும்.

குளிர்ந்த ஃபோர்க் கொண்டு, வெண்ணெய்யை மாவில் சேர்த்தாற்போல மசிக்கவும். பிறகு, கைகளால் சேர்த்து தேய்க்கவும். குளிர்ந்த நீர் கொண்டு மாவாகச் சேர்த்து பிசையவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். நிறைய தண்ணீர் சேர்க்கக்கூடாது. இரு உருண்டைகளாக உருட்டி, மொத்தமாக திரட்டவும். அவனில் வைத்து பேக் செய்யக்கூடிய ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அதன் வாய் அகலத்துக்கு, திரட்டிய மாவை, ஒரு கத்தி கொண்டு வட்டமாக வெட்டிக்கொள்ளவும். மீதி உள்ள மாவைக்கொண்டு, பாத்திரத்தின் வாய் பகுதியில் படத்தில் காட்டியுள்ளது போல ஒட்டவும்.

முன்பு செய்து வைத்த காய்கறிக்கலவையை பாத்திரத்தில் 3/4 பங்கு நிரப்பவும். வெட்டி வைத்துள்ள மாவைக்கொண்டு மூடவும். ஓரங்களை ஃபோர்க் கொண்டு அழுத்தி சீல் செய்யவும். பால் அல்லது வெண்ணெயை மாவின் மேல் பிரஷ் கொண்டு தடவவும். கத்தி கொண்டு, ஆங்காங்கே கீறி விடவும். 30 – 35 நிமிடங்கள் (அல்லது மேல் மாவு பொன்னிறம் ஆகும் வரை) 200 deg Cல் பேக் செய்யவும். மேலே சிறிது வெண்ணெய் பிரஷ் செய்து சூடாக பரிமாறவும். மேலே உள்ள மொறுமொறு மாவை (Crust) உடைத்து, சேர்த்து சாப்பிட வேண்டும். 2T26iIU“/>

Related posts

சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்தி

nathan

இறால் வடை

nathan

பிரட் பஜ்ஜி

nathan

சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் பன்னீர் ராஜ்மா மசாலா

nathan

மட்டன் கொத்து பரோட்டா

nathan

மிலி ஜுலி சப்ஜி

nathan

கார உருளைக் கிழங்கு போளி செய்வது எப்படி

nathan

சிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி?

nathan

சிக்கன் நூடுல்ஸ்

nathan