28.2 C
Chennai
Sunday, Sep 29, 2024
12 1439360751 8 sleep2
ஆரோக்கியம் குறிப்புகள்

தூங்கும் போது ஏன் இடது பக்கமாக தூங்க சொல்கிறார்கள் என்று தெரியுமா?

தூங்கும் போது நாம் எந்த நிலையில் இருப்போம் என்றே நமக்குத் தெரியாது. ஆனால் தூங்கும் நிலைக்கும், ஆரோக்கியத்திற்கும் சம்பந்தம் உள்ளது என்று தெரியுமா? ஆம், பொதுவாக நாம் நேராக படுப்பது தான் சிறந்த நிலை என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில், இடது பக்கமாக திரும்பி படுப்பதால் எண்ணற்ற நன்மைகளைப் பெற முடியும்.

இடது பக்கமாக தூங்குவதால், பல நோய்கள் தடுக்கப்படுவதோடு, செரிமானம் மேம்பட்டு, குடலியக்கம் சீராக நடைபெறும். எனவே தூங்கும் போது இடது பக்கமாக தூங்கும் வழக்கத்தைக் கொள்ளுங்கள்.

சரி, இப்போது இடது பக்கமாக தூங்குவதால் என்னென்ன பிரச்சனைகளையெல்லாம் தவிர்க்கலாம் என்று பார்ப்போம்.

டாக்ஸின்கள் வெளியேறும்
இடது பக்கமாக தூங்கும் போது நிணநீர் வடிகால் மூலம் டாக்ஸின்கள் வெளியேற்றப்படும். இதனால் டாக்ஸின்கள் உடலில் தேங்குவது தடுக்கப்பட்டு, அதன் மூலம் கடுமையான நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடு மேம்படும்
உடலிலேயே கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் தான் கழிவுகள் மற்றும் டாக்ஸின்கள் அதிகம் தேங்கக்கூடும். ஆனால் இடது பக்கமாக தூங்கினால், இந்த உறுப்புகளில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் டாக்ஸின்கள் வடிகட்டி வெளியேற்றப்படும்.

செரிமானம் நன்கு செயல்படும்
இடது பக்கமாக தூங்குவதால், இரைப்பை மற்றும் கணையம் இயற்கையாக சந்திக்கும். இதனால் உணவு செரிமானம் சீராக நடைபெறும். மேலும் உணவுகளும் இரைப்பையின் வழியாக அதிகப்படியான ஈர்ப்பின் காரணமாக எளிதில் செரிமானமாகி வெளியே தள்ளப்படும்.

மென்மையான குடலியக்கம்
இடது பக்கமாக தூங்கும் போது, உண்ட உணவானது சிறு குடலில் இருந்து பெருங்குடலுக்கு ஈர்ப்பின் காரணமாக எளிதில் தள்ளப்படும். இதனால் காலையில் எவ்வித இடையூறுமின்றி, உடலில் சேர்ந்த கழிவுகளை மலமாக வெளியேற்றலாம்.

அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல்
இடது பக்கம் தூங்குவதன் மூலம், அசிடிட்டியை உண்டாக்கிய இரைப்பையில் உள்ள அமிலமானது உணவுக்குழாய் வழியே மேலே ஏறுவது தடுக்கப்பட்டு, இதனால் நெஞ்செரிச்சல் தடுக்கப்படும்.

அசௌகரியம் தடுக்கப்படும்
இடது புறமாக தூங்குவதால், கல்லீரல் மற்றும் பித்தப்பை இயற்கையாக சந்திப்பதோடு, எவ்வித கழிவுகளும் இல்லாமல் நிணநீர் அதிகமாக சுரக்கப்படும். இதனால் உண்ட உணவுகள் எளிதில் செரிமானமாகி, அசௌகரியத்தைத் தடுக்கும்.

கொழுப்புக்களும் கரையும்
அனைவருக்குமே கல்லீரல் மற்றும் பித்தப்பையில் இருந்து செரிமானத்திற்கு தேவையான பித்தநீர் சுரக்கப்படுகிறது என்று தெரியும். அதிலும் இடது புறமாக தூங்கும் போது, இந்த பித்தநீரின் உற்பத்தி அதிகமாவதால், கொழுப்புக்கள் இருந்தாலும் எளிதில் உடைக்கப்பட்டு கரைந்துவிடும். இதனால் உடலில் மற்றும் கல்லீரலில் கொழுப்புக்கள் தங்குவது தடுக்கப்படும்.

வலது பக்கம் தூங்குவதால் என்ன நடக்கும்?
வலது பக்கமாக படுப்பதால், டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேற்றப்படாமல் இருப்பதோடு, செரிமானம் மோசமாக நடைபெறும்.

நேராக படுப்பதால் என்ன நடக்கும்?
நேராக படுக்கும் போது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். மற்றும் மூச்சுத்திணறல் அல்லது ஆஸ்துமா இருப்பவர்கள் இந்நிலையில் படுப்பது மிகவும் ஆபத்தானது.12 1439360751 8 sleep2

Related posts

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளை உயரமாக்கும் உணவுகள் இது தான்!

nathan

மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான வழிகள் -தெரிந்துகொள்வோமா?

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள் தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

குழந்தைகளுக்கு மனநல பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்களுக்கு இன்னும் சரியா பிரா துவைக்கவே தெரியலையா?…

nathan

துளசி இலையின் மருத்துவ குணங்கள்

nathan

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது – Powerful foods that detox your body

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரவில் உள்ளாடையுடன் உறங்குவது சரிதானா?

nathan

பெற்றோர் கட்டாயம் இதை படியுங்கள்..`ஆட்டிசம் குழந்தைக்குத் தூக்கமின்மை ஒரு பெரும் பிரச்னை..!’

nathan