காலை உணவைத் தவிர்க்கும் வயதானவர்களுக்கு இதயநோய்கள், மனச்சோர்வு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படலாம். எனவே, கட்டாயம் காலை உணவை உண்போம்.
காலைச் சிற்றுண்டியை தவிர்க்கிறீர்களா?
இன்றைய பரபரப்பான உலகில் பலரும் காலைச் சிற்றுண்டியைத் தவிர்த்துவிடுகிறார்கள். ‘காலை வேளைக்கும் சேர்த்து மதியம் சாப்பிட்டுக்கொண்டால் போயிற்று’ என்கிறார்கள்.
ஆனால் காலை உணவைத் தவிர்ப்பது மிகவும் தவறு என்கிறார்கள் ஆரோக்கிய நிபுணர்கள்.
ஏன் அவசியம் காலையில் சாப்பிட வேண்டும்?
இரவு உணவுக்குப் பின்னர் 6 முதல் 10 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம். அதனால் மறுநாள் காலையில் சுறுசுறுப்பாகச் செயல்பட உடலுக்கு உணவு நிச்சயம் தேவைப்படுகிறது.
அதிலும் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காலைச் சிற்றுண்டியில் இருக்கவேண்டியது அவசியமாகும்.
மூளை மற்றும் தசைகளுக்குத் தேவையான ஊட்டத்தை காலை உணவு அளிக்கிறது.
காலைச் சிற்றுண்டியைத் தவிர்க்கும் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் சோர்வு, ஞாபக மறதி போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
காலைச் சிற்றுண்டி சாப்பிடாத இளம் வயதினருக்கு குமட்டல், சோர்வு, வயிற்றுப்புண், முடி உதிர்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
காலை உணவைத் தவிர்க்கும் வயதானவர்களுக்கு இதயநோய்கள், மனச்சோர்வு, சர்க்கரை நோய் போன்றவை ஏற்படலாம்.
எனவே, கட்டாயம் காலை உணவை உண்போம்.