hand bag2 18266
மருத்துவ குறிப்பு

பெண்களின் ஹேண்ட்பேக்கில் இருக்க வேண்டியவை, இருக்கக் கூடாதவை!

பெண்களின் ஹேண்ட்பேக்கில் அவசியம் இருக்க வேண்டிய மற்றும் இருக்கக் கூடாத பொருட்கள் என்னென்ன? இங்கு பார்ப்போம்.

அவசியம் இருக்க வேண்டியவை:

* செலவுக்குத் தேவையான பணத்தை கைப்பையின் உள்ளறையில் வைத்திருப்பது நல்லது. இதனால் பணம் தொலைந்து போவதை தவிர்ப்பதுடன், உளவியல் ரீதியாக தேவையற்ற செலவை குறைத்துக்கொள்ள முடியும்.

* அலைபேசியில் பேட்டரி தீர்ந்து போனாலோ அல்லது அலைபேசி தொலைந்துபோனாலோ, யாரையும் தொடர்புகொள்ள முடியாமல் நிலைமை சிக்கல் ஆகிவிடும். எனவே, அவசரத்துக்கு உதவுகிற மாதிரி, மிக முக்கிய தொடர்பு எண்களை மட்டுமாவது ஒரு சிறிய பாக்கெட் சைஸ் டைரியில் குறித்து கைப்பையோடு வைத்துக் கொள்ளலாம்.

* பேருந்து அல்லது ரயிலில் தினசரி பயணிப்பவராக இருந்தால் பயண அடையாள அட்டையையும், வாகன ஓட்டியாக இருந்தால் லைசென்ஸையும் கைப்பையில் நிரந்தரமாக ஓர் அறையில் வைக்கவும். கைப்பை தொலைந்துபோகக்கூடும் என்பதால், அடையாள அட்டைகளின் நகலை மட்டுமே கைப்பையில் வைத்திருக்கவும். ஒரிஜினலை வீட்டில் பத்திரமாக வைக்கவும்.

* எப்போதும் ஒரு பேனா வைத்திருப்பதும், சில்லறை வைத்திருப்பதும் நல்லது.

* பயணிக்கும் இடத்தைப் பொறுத்து தேவையிருப்பின் பழம் நறுக்க சின்னதாக, கவர் செய்யப்பட்ட ஒரு கத்தி, பாதுகாப்புக்கு பெப்பர் ஸ்ப்ரே ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம்.

* கைப்பையின் தனியறையில் எப்போதும் அவசியம் நாப்கின் வைத்திருக்கவும். அவசரத்துக்கு உங்களுக்கோ, தோழியருக்கோ பயன்படலாம்.

* சேஃப்டி பின்கள், ஹேர்பின்கள் மற்றும் தலைவலி மாத்திரை, தைலம் என தேவைக்கேற்றவைகளை வைத்துக் கொள்ளலாம்.

* பெண்களின் கைப்பையில் கைக்குட்டை நிச்சயம் இடம் பெற வேண்டும். டிஷ்யூ பேப்பரும் எடுத்துச் செல்லலாம்.

* தேவைக்கேற்ப அழகுசாதனப் பொருட்களை வைத்திருக்கலாம். அதிகம் வேண்டாம்.

* நீண்ட நேரம் வெளியில் இருக்க வேண்டி இருந்தால் மறக்காமல் செல்போன் சார்ஜர் மற்றும் பவர் பேங்கை எடுத்துச் செல்லவும்.

ஹேண்ட் பேக் உடன் மாடல்கள்

hand bag2 18266

இருக்கக் கூடாதவை:

* அதிக சில்லறை இருந்தால், கைப்பையின் எடை அதிகரிக்கலாம். அதனால் அளவான சில்லறை போதும்.

* கத்தியை சரியாக கவர் செய்யாமல் வைப்பதால் கைப்பை கிழிந்து, கைகளையும் பதம் பார்க்கலாம் கவனம்.

* விசிட்டிங் கார்டுகளை அதிக அளவில் கைப்பையிலேயே சேமிக்காமல், அவற்றை வீட்டில் பத்திரமாக வைக்கவும்.

* பேருந்து பயணச்சீட்டு, குறிப்பெடுத்த காகிதங்கள், கடைகளில் வாங்கிய ரசீது என நெடுநாள் குப்பைகளை குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது கழிக்கவும்.

* பேனாவை மூடியில்லாமல் வைக்க வேண்டாம். மை கசிந்து கையும் பையும் பாழாகிவிடும்.

* அதிக மேக்கப் சாதனங்களை வைத்திருக்க வேண்டாம். மூடி திறந்து, கொட்டி என வீணாகிவிடும்.

* உணவுப் பொருட்கள், அதிக கொள்ளளவில் வாட்டர் பாட்டில் என வைத்து எடையை அதிகரிக்க வேண்டாம். இதனால் கைப்பை சீக்கிரம் கிழிந்துவிடும். தேவையாக இருக்கிற பட்சத்தில் அந்த எடையைத் தாங்கக்கூடிய தரத்தில் பையை வாங்கவும்.

Related posts

மலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்!

nathan

ஆல்கஹாலில் வயாகரா கலந்து குடித்தால் என்னவாகும் என்று தெரியுமா? சீனர்களை கேளுங்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா வெரிகோஸ் நரம்பை குணப்படுத்தும் பச்சை தக்காளி வைத்தியம்!

nathan

எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட குப்பைமேனி மூலிகை !!

nathan

40 வயதில் பெண்களை தொடரும் பல்வேறு பிரச்சனைகள்

nathan

கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை கரைக்கும் இயற்கை வழிகள்

nathan

வெண் புள்ளியிலிருந்து விடுதலை பெற சூப்பரான இயற்கை வைத்தியம் – தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த பழக்கங்களை விட்டொழித்தால் மார்பக புற்று நோய் வராது!! அப்ப இத படிங்க!!!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்

nathan