சிலர் எப்போது பார்த்தாலும் கை கழுவிக் கொண்டே இருப்பார்கள். நல்ல பழக்கம் தான் எனிலும் ஏதேனும் கொஞ்சம் தூசி படிந்தப் பொருளை தொட்டுவிட்டால் கூட ஓடிப் போய் கை கழுவி விட்டு தான் வருவார்கள்.
இவ்வளவு சுத்தம் பார்ப்பவர்கள், அவர்களது உடல் பாகங்களில் தங்கியிருக்கும் பாக்டீரியாக்களை நேரடியாக கண் மூலம் பார்க்க முடிந்தால், செத்தே போவார்கள். ஏனெனில், நாம் எண்ணுவதை விட, நமது சில உடல் பாகங்களில் நிறைய பாக்டீரியாக்கள் தேங்கியும், தங்கியும் இருக்கின்றன.
இனி, மனித உடலில் அதிகமாக அழுக்கு, பாக்டீரியா சேரும் இடங்கள் எவை என்று பார்க்கலாம்….
முகம் கண்ணாடியில் பார்க்கும் போது நமது முகம் தெளிவாக தெரிய வேண்டுமே தவிர, அழுக்காக அல்ல. நமது உடலிலேயே மிகவும் அதிகமாக அழுக்கு சேரும் இடம் முகம் தான். நாம் பயன்படுத்தும் மொபைல் மூலமாக கூட நிறைய நச்சுகள் நமது முகத்தில் பரவுகிறது.
காது அடுத்து நிறைய அழுக்கு சேரும் உடல் பாகமாக கருதப்படுவது காது. ஆனால், மருத்துவர்கள் காதில் இருக்கும் அழுக்கை அகற்ற வேண்டாம் என்றும், அகற்றுவது தான் காதுக்கு வலி தரும் என்றும் கூறுகிறார்கள். எனவே, காதில் இருக்கும் அழுக்கை அதன் போக்கில் விட்டுவிடுவது தான் நல்லது.
கண்கள் கண்களில் கூட அழுக்கு இருக்கிறதா என ஆச்சரியப்படுகிறீர்களா? நமது கண்களில் தான் அதிகமான பாக்டீரியாக்கள் இருக்கிறதாம். அதிலும் குறிப்பாக நமது கண் இமைகளில் தான் அதிகமான கிருமிகள் இருக்கிறதாம். ஏனெனில், இவை தான் கண்ணுக்குள் கிருமிகள் போக முடியாது தடுக்கிறது.
வாய் ஹார்வார்ட் மருத்துவ கல்லூரி ஆராய்சியாளர்கள் நமது வாயில் மட்டுமே 615 விதமான பாக்டீரியாக்கள் இருப்பதாய் கண்டுபிடித்துள்ளனர். குறைந்தது ஓர் நாளுக்கு இரண்டு முறை பிரஷ் செய்தல் வேண்டும். சாப்பிட்டு முடித்த பிறகு வாய் கழுவ வேண்டும்.
மூக்கு பல முறை நமக்கு மூக்குக்குள் ஏதோ குடைவது போல இருக்கும் ஆனால், நாகரீகம் கருதி ஏதும் செய்யமாட்டோம். நாம் சுவாசிக்கும் போது எண்ணற்ற பாக்டீரியாக்கள் மூக்கின் வழியாக தான் நமது உடலுக்குள் செல்கின்றன.
விரல் நகங்கள் நமது உடலில் அழுக்கு நிறைய சேரும் உடல் பாகங்களில் அடுத்த இடத்தில் இருப்பது விரல் நக இடுக்குகள். பாக்டீரியாக்களுக்கு மிகவும் பிடித்த இடமாம் இது. கிட்டத்தட்ட அவற்றின் மைதானம் என்று கூட கூறலாம்.
ஆசன வாயு ஆயிரக்கணக்கான "உவ்வ்வ்வே…" பாக்டீரியாக்கள் இருக்கும் இடம் நமது ஆசன வாயு பகுதி தான்.
தொப்புள் பெரும்பாலும் யாரும் அறிந்திராத விஷயம் என்னவெனில், நமது தொப்புள் பகுதியிலும் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கிறது என்பது தான். இவற்றை எல்லாம் வெறும் கண்ணில் நாம் பார்க்க முடியாது என்பதால் தான், நாம் நிம்மதியாக வாழ்கிறோம். இதுவே, பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும் என கொஞ்சம் யோசித்து பாருங்கள்…….