sundai thosai 2944698f
சிற்றுண்டி வகைகள்

சுரைக்காய் தோசை

என்னென்ன தேவை?

சம்பா கோதுமை – முக்கால் கப்

பச்சரிசி – கால் கப்

பாசிப் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்

சுரைக்காய்த் துருவல் – ஒரு கப்

இஞ்சி – சிறிய துண்டு

பச்சை மிளகாய் – 2

வெங்காயம் – 1

கடுகு – கால் டீஸ்பூன்

கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சம்பா கோதுமை, பச்சரிசி, பாசிப் பருப்பு அனைத்தையும் நன்றாகக் கழுவி, நான்கு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறியதும் அவற்றுடன் சுரைக்காய், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக அரையுங்கள்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு சேர்த்துத் தாளியுங்கள். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி, அதை மாவில் கொட்டிக் கிளறுங்கள். இந்த மாவைத் தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு எடுத்தால் மணக்க மணக்க சுரைக்காய் தோசை தயார். சுரைக்காய் சேர்த்திருப்பதே தெரியாது.sundai thosai 2944698f

Related posts

சுவையான சத்தான கோதுமை ரவை இட்லி

nathan

வெல்லம் கோடா

nathan

கப் கேக் செய்வது எப்படி ?

nathan

சுவையான மொறு மொறு பூண்டு பக்கோடா…

nathan

குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர்

nathan

முளைகட்டிய தானிய சப்பாத்தி

nathan

மசால் வடை

nathan

அவல் கிச்சடி

nathan

ரவை கொழுக்கட்டை

nathan