30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

சில்லி கார்லிக் நூடுல்ஸ் : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள் :

நூடுல்ஸ் – அரை கப்,
வெங்காயம் – 2
கேரட் – 50 கிராம்
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி – சிறிதளவு,
தக்காளி சாஸ் – 3 ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :
* கொத்தமல்லி, கேரட், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* நூடுல்ஸை வேகவைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் கேரட், உப்பு சேர்த்துக் கிளறவும்.

* கேரட் பாதியளவு வெந்ததும் தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து சிறிது கிளறிய பின்னர் வெந்த நூடுல்ஸை போட்டு கலக்கவும்.

* எல்லாம் சேர்ந்து வந்ததும் கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

Related posts

சுரைக்காய் தோசை

nathan

சூப்பரான பீட்ரூட் வடை

nathan

குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் காலிஃப்ளவர் பக்கோடா

nathan

சூப்பரான மக்ரோனி ரெசிபி

nathan

குதிரைவாலி இடியாப்பம் செய்வது எப்படி?

nathan

பிரட் போண்டா தீபாவளி ரெசிபி

nathan

சிறுதானிய கார குழிப்பணியாரம் செய்முறை விளக்கம்

nathan

சுரைக்காய் சப்ஜி

nathan