34 C
Chennai
Wednesday, May 28, 2025
29 1472468448 darkspot
முகப் பராமரிப்பு

கரும்புள்ளியை ஒரே வாரத்தில் மறையச் செய்யும் ஒரு பொருள் என்ன தெரியுமா?

கை, கால், முகம், கண் என தனித்தனியே அழகு படுத்திக்க ஒவ்வொரு அழகுப் பொருள் இருந்தாலும், எல்லாவித அழகு பராமரிப்பிற்கும் உபயோகிக்கப்படுவது ஒரு சில பொருட்கள்தான். அதில் ஒன்றுதான் எலுமிச்சை.

எலுமிச்சை சாற்றில் பல நல்ல சத்துக்கள் உள்ளன. ஆன்டி ஆக்ஸிடென்ட், விட்டமின் சி போன்ற சத்துக்கள் அழகினை அதிகப்படுத்துகின்றன. நிறைய சரும பிரச்சனைகள் மற்றும் கூந்தல் பிரச்சனைகளை போக்கும். சுருக்கம், கருமை, முகப்பரு, மற்றும் பொடுகு, தொற்று ஆகியற்றை நீக்கும். இப்படி எலுமிச்சை சாறு கொண்டு எப்படி அழகுபடுத்தலாம்.தொடர்ந்து படியுங்கள்.

அரிப்பு, பொடுகு : கூந்தல் அரிப்பு, பொடுகு ஆகியவை உள்ளதால், எலுமிச்சை சாறை எடுத்து ஒரு பஞ்சினைக் கொண்டு ஸ்கால்ப்பில் தேயுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும். இதனால் பொடுகு நீங்கி இருக்கும். அழுக்குகள் வெளியேறி கூந்தல் வளர்ச்சியை தூண்டும்.

கிளென்ஸர் : ஒரு எலுமிச்சை சாறில் ஒரு டம்ளர் கலந்து முகத்தை கழுவுங்கள். இதனால் அழுக்குகள் வெளியேறிவிடும். இறந்த செல்கள் நீங்கி விடும். அதிகப்படியான எண்ணெய் வழியாது.

கருமை போக்க : முகத்தில் ஆங்காங்கே வெயிலினால் கருமை படர்ந்துள்ளதா? வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுடன் சிறிது பால் கலந்து முகத்தில் தடவுங்கள். எண்ணெய் சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறை பஞ்சினால் நனைத்து முகம் முழுவதும் தடவுங்கள். சில நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால் உடனடியாக கருமை போயிருப்பதை காண்பீர்கள்.

கண்களில் இருக்கும் சதைப்பையை மறைய : கண்களுக்கு அடியில் நீர் கோர்த்து வீங்கி, வயதான தோற்றத்தை தரும். எலுமிச்சை சாறில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து கண்களுக்கு அடியில் தடவினால், சில நாட்களில் கண்களுக்கு அடியிலிர்க்கும் பை மறைந்து விடும்.

தழும்புகள் மறைய : இது மிகச் சிறந்த வழியாகும். தழும்புகளை ஏற்படுத்தும் திசுக்களின் மீது வினைபுரிகிறது. இது ஏற்படுத்தும் ரசாயன மாற்றங்களால், அந்த இடத்தில் பின்னப்பட்டிருக்கும் இறந்த செல்கள் கரைந்து புதிய செல்கள் உருவாகும். இதனால் வேகமாய் தழும்புகள் மறைந்துவிடும். தினமும் தழும்பின் மீது எலுமிச்சை சாறை தடவி வாருங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.

கரும்புள்ளி மறைய : சிலருக்கு சருமம் பளிச்சென்று இருந்தாலும் ஆங்காங்கே கரும்புள்ளி தங்கி சருமத்தின் அழகை கெடுக்கும். எலுமிச்சை சாற்றில் சிறிது மஞ்சள் பொடியை கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தேய்த்து வாருங்கள். கரும்புள்ளி ஒரே வாரத்தில் மறைந்துவிடும்.

29 1472468448 darkspot

Related posts

சூப்பர் டிப்ஸ்! மூக்குகிட்ட உங்களுக்கும் இப்படி இருக்கா? இதோ இத தேய்ங்க உடனே வெளிய வந்துடும்…

nathan

சூப்பர் டிப்ஸ்! முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்

nathan

பலன்தரும் இயற்கை ஃபேஸ் பேக்…!

nathan

நீண்ட நாட்கள் இளமையாக இருக்கணுமா..?அப்ப இத படிங்க!

nathan

சூப்பர் டிப்ஸ்! கருமையை போக்கி சிகப்பழகு தரும் டிப்ஸ்

nathan

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் சில இயற்கை வழிகள்

nathan

அச்சச்சோ சிவப்பழகு க்ரீம்!

nathan

பெண்களே வெயிலால் உங்க சருமம் கருமையாகாம இருக்கணுமா?

nathan

ஃபேஸ் மாஸ்க்

nathan