30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
முகப் பராமரிப்பு

முகப்பொலிவைத் தரும் இலைகள்

புதினா

ஒரு பௌலில் பாத்திரத்தில் கையளவு புதினாவை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன், சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள மேடு பள்ளங்களை சுருங்கச் செய்வதோடு, சருமத்துளைகளில் தங்கியிருந்த அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும்.

வேப்பிலை

வேப்பிலையின் மருத்துவ குணத்தைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. வாரம் ஒரு முறை வேப்பிலை நீரால் குளித்து வந்தால், உடல் குளிர்ச்சியடைந்து, சருமத்தில் ஏதேனும் நோய்த்தொற்றுகள் இருந்தாலும், அவை குணமாகும். முக்கியமாக நீங்கள் முகப்பருவால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தல், வேப்பிலையை பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், பருக்கள் மறைந்து, முகம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கறிவேப்பிலை

பொதுவாக கறிவேப்பிலை முடியின் வளர்ச்சியை அதிகரிக்க மட்டும் தான் பயன்படும் என்று தெரியும். ஆனால் அவற்றைக் கொண்டு கரும்புள்ளிகளைப் போக்கலாம் என்பது தெரியுமா? அதற்கு ஒரு கையளவு கறிவேப்பிலை நீரில் போட்டுஇ அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, நீரை வடித்து, அந்த நீரால் முகத்தை கழுவி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

துளசி

துளசியும் கரும்புள்ளிகளைப் போக்க உதவும். அதற்கு துளசியை நீரில் நனைத்து, அதனை மூக்கின் மேல் 6 நிமிடம் வைத்து, பின் எடுக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

வெற்றிலை

வெற்றிலையை அரைத்து, அத்துடன் தேங்காய் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் மேம்படும். ஆனால் இந்த ஃபேஸ் பேக்கை சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது.

Related posts

தெரிஞ்சிக்கங்க…உங்க முகம் இப்படி இருக்கா? அதுக்கு உடம்புல இருக்குற இந்த பிரச்சனை தான் காரணம் தெரியுமா?

nathan

மூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளியைப் போக்க டிப்ஸ்

nathan

எளிய இயற்கை அழகு குறிப்புகள்! அடர்த்தியான புருவங்கள் வேண்டுமா?

nathan

முகத்தில் உள்ள அழுக்கை நீக்கும் ஸ்கரப்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரும கோளாறுகளுக்கு தீர்வளிக்கும் சிறந்த உணவுகள்!

nathan

ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவுவது நல்லது எனத் தெரியுமா?

nathan

முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ வை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

கருவளையத்தை போக்கும் ஒரு மேஜிக் குறிப்பு !!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கோடையில் பிம்பிள் வருவதைத் தடுக்க சில சிம்பிளான டிப்ஸ்…

nathan