23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
navasana
தொப்பை குறைய

விரைவில் தொப்பையை குறைக்கும் பரிபூரண நவாசனா….!

பரிபூரண என்றால் சமஸ்கிருதத்தில் முழுமையான, நவாசனா என்றால் படகு என்று பொருள் தரும். முழுமையான படகு போல் அமர்ந்த நிலையில் செய்யப்படும் இந்த ஆசனத்திற்கு பரிபூரண நவாசனா என்று பெயர் வந்துள்ளது. அடிவயிற்றில் அதிக அழுத்தம் தரப்படுவதால் விரைவில் அங்கிருக்கும் கொழுப்புகள் கரையும்.

செய்முறை :
முதலில் விரிப்பில் கால்களை நீட்டி அமருங்கள். மூச்சை இழுத்துவிட வேண்டும். கைகளை தரையில் அழுந்த பதியுங்கள். பின்னர் மெதுவாக பாதங்களை தூக்குங்கள்.

கால்கள் வளையக் கூடாது. பேலன்ஸ் இல்லையென்றால் மெதுவாக தொடையை கைகளால் பிடித்துக் கொள்ளலாம். பாத விரல்கள் உங்கள் கண்களின் உயரத்திற்கு சிறிது அதிகமாக இருக்கும்படி தூக்குங்கள்.

மொத்த எடையையும் இப்போது உங்கள் இடுப்பு தாங்கும். முதுகை வளைக்காமல் இருக்க வேண்டும். இப்போது படகு போன்ற நிலை

யில் நீங்கள் இருப்பீர்கள். ஆரம்பத்தில் செய்யும்போது இந்த நிலையில் 10- 20 நொடிகள் இருங்கள். பின்னர் ஒரு நிமிடம் வரை தக்குபிடிக்க முடியும். பின் மெதுவான கால்களை இறக்கி இயல்பு நிலைக்கு வாருங்கள்.

பலன்கள் :
உங்கள் வயிற்றிற்கும் முதுகிற்கும் பலம் அளிக்கும். சிறு நீரகம், சிறுகுடல் ஆகியவற்றின் செயல்களை ஊக்குவிக்கும். ப்ரோஸ்டேட் சுரப்பியை தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

கழுத்து, முதுகுவலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். கர்ப்பிணிகளும் செய்யக் கூடாது. அதே போல், குறைந்த ரத்த அழுத்தம், ஆஸ்துமா, இதய நோய் இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
navasana

Related posts

நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்.

nathan

வயிறு குறைய.. ஆயுர்வேத மருத்துவம்!

nathan

தொப்பையைக் குறைக்க இதோ ஒரு சுலபமான வழி!

nathan

உங்களுக்கு தெரியுமா எவ்வளவு பெரிய தொப்பையும் இந்த டீ குடிச்சா குறைஞ்சிடுமாம்…

nathan

தொப்பையை வேகமாக குறைக்க உதவும் யோகாசனங்கள்!

nathan

தொப்பையை குறைக்கும் அன்னாசிப் பழம்

nathan

பெரிய தொப்பையும் ஒரே இரவில் குறைக்க சூப்பர் டிப்ஸ்?

nathan

தொப்பையை குறைக்க உதவும் இந்திய மாற்று உணவுகள்!!!

nathan

குனிய முடியாத அளவில் தொப்பை இருக்கா? அதைக் குறைக்க இதோ சில வழிகள்!!!

nathan