ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

தாய்மையை தடுக்கும் உணவுகள்! கவனம் தேவை

Description:

-canned-fooபெண்ணிற்கு தாய்மையை தருவதும் ஆணுக்கு ஆண்மையை தருவதும் சத்தான உணவுகள்தான். வளமான நிலம், வீரியமான விதைகள்தான் ஆரோக்கியமான விளைச்சலை தரும். இது விவசாயத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும்தான் ஏனெனில் நலமான சந்ததியை உருவாக்குவது நாம்தான் எனவே நாம் உண்ணும் உணவில் சத்துக்கள் கலந்திருக்க வேண்டும். ருசியாக இருக்கிறது என்பதற்காக கண்டதையும் சாப்பிட்டு வயிறை நிரப்புவதை விட பசியறிந்து ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது விந்தணு, கருமுட்டை ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கு என்கின்றனர் நிபுணர்கள் பெண்களின் தாய்மையை தடுக்கும் உணவுகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

ஆண்கள் தினசரி கால் லிட்டர் கோலா குடித்தால் அவர்களின் விந்தணு உற்பத்தியில் 30 சதவிகிதம் பாதிக்கும். அதேபோல் பெண்கள் கொழுப்புசத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதால் 85 சதவிகிதம் வரை அவர்களுக்கு தாய்மை அடைவதில் பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

பெண்ணின் உடலுக்குள் இருக்கும் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாடுகள் முழுமையாக நடக்க குறிப்பிட்ட ஹார்மோன்களின் பங்களிப்பு மிக அவசியம். முரண்பாடான உணவுகள் சாப்பிடும்போது அதில் இருக்கும் ரசாயனங்கள், குறிப்பிட்ட ஹார்மோன்களில் தாக்கத்தை ஏற்படுத்தி கட்டுப்படுத்தும். இதன் மூலம் கர்ப்பம் தரிப்பது தாமதமாகும். உடல் குண்டாக இருப்பதும் ஓவர் ஒல்லியாக இருப்பதும் தாய்மைக்கு தடையாகும்.

பிஸ்கெட், ஐஸ்கிரீம், பேக்கரி உணவுப் பொருட்கள், இறைச்சி வகைகள் போன்றவைகளை அதிகம் சாப்பிடுவதும் கர்ப்பத்திற்கு ஏற்றதல்ல. அதேபோல் டின்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகள், செயற்கை இனிப்புகள், அதிகமான சர்க்கரையின் பயன்பாடு, கொழுப்பு நிறைந்த உணவுகள் போன்றவைகளும் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டில் மந்த நிலையை உருவாக்கும்.

உண்ணும் உணவுப் பொருட்களில் கிருமி நாசினிகள் கலந்திருந்தால் மலட்டுத்தன்மை, கர்ப்பச்சிதைவு, ஊனமுடன் குழந்தை உருவாகுதல் போன்றவை ஏற்படலாம். கலப்பட உணவுகள் சாப்பிட்டால் அது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, நோயாளியாக மாற்றி விடும். மேலும் உணவுப் பொருட்களில் நிறத்திற்கு சேர்க்கப்படும் செயற்கை பொருட்கள், உணவுப் பொருட்களை அதிக நாட்கள் பயன்படுத்த வசதியாக சேர்க்கப்படும் ரசாயனங்கள் போன்றவை இனப்பெருக்க திறனை வெகுவாக பாதிக்கும்.

கிராமிய, பாரம்பரிய உணவுகள் தான் தாய்மையடைதலுக்கு ஏற்றது. அத்தகைய உணவுகளை உண்ணும்போது தேவையான புரோட்டின் சத்து இருக்கிறதா என்றும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

தவிடு நீக்காத தானிய உணவுகளை சாப்பிட வேண்டும். காய்கறி, பழங்கள், கீரை வகைகளை உணவில் அதிக அளவில் சேருங்கள். மீன், முளை கட்டிய தானியம் போன்றவைகளில் உடலுக்கு தேவையான கொழுப்பும், ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவைகளையும் சாப்பிடுவது நல்லது

ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிட்டால் அதில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும். மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக உடலுறவை அமைத்துக் கொள்ளுங்கள். தேவையான உடற்பயிற்சியையும் செய்யுங்கள். ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Related posts

வாரம் ஒருமுறை இந்த அரிசியை சாப்பிடுங்கள்!! அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

நல்ல சுவையான தா்பூசணி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

nathan

வீட்டிலேயே சுவையான அரிசி அப்பளம் செய்யலாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா கிராம்பின் மருத்துவ நன்மைகள்?

nathan

கருப்பை புற்று நோய்க்கான டயட்

nathan

கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி

nathan

அடிக்கடி நண்டு உணவுகள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

கர்ப்பகாலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது பாதுகாப்பானதா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… வயிறு தட்டையா ஸ்லிம்மா இருக்கணும்னா இந்த இஞ்சி-சீரகத் தண்ணி குடிங்க!

nathan