29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
பழரச வகைகள்

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மாதுளம் ரைத்தா

மாதுளம், தயிர் சேர்த்த ரைத்தா உடலுக்கு மிகவும் நல்லது. இதை சாலட் போலவும் சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மாதுளம் ரைத்தா
தேவையான பொருட்கள் :

தயிர் – ஒரு கப்
உப்பு – தேவைகேற்ப
மாதுளம் பழம் – 1
சாட் மசாலா – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை :

* மாதுளம் பழத்தில் இருந்து முத்துக்களை எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு கிண்ணத்தில் தயிர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

* பின் அதில் மாதுளம் பழ முத்துக்கள், சாட் மசாலா, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

* சத்தான மாதுளம் ரைத்தா ரெடி.

* புலாவுடன் வைத்து பரிமாறலாம். புளிக்காத தயிரை உபயோகித்தால் நன்றாக இருக்கும்.

* அதை ரைத்தாவாகவும் சாப்பிடலாம். சாலட்டாகவும் சாப்பிடலாம்.

Related posts

வெயிலுக்கு இதமான நுங்கு ரோஸ்மில்க்

nathan

பாதாம் கீர்

nathan

அட்டுக்குலு பாலு

nathan

குளு குளு புதினா லஸ்ஸி

nathan

பேரீச்சை வித் காபி மில்க் ஷேக்

nathan

டிரை நட்ஸ் மில்க் ஷேக்

nathan

கோடைக்கு இதம் தரும் வெள்ளரி மோர் பானம்

nathan

வீட்டிலேயே தயாரிக்கலாம். டாப் கிளாஸ் குளிர்பானங்கள்!

nathan

கோடைக்கேற்ற குளு குளு ஸ்மூத்தி

nathan