27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
07 1438925412 7 beetrootjuice
ஆரோக்கிய உணவு

ஆண்கள் பீட்ரூட் சாப்பிட்டால் பாலியல் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்: ஆய்வில் தகவல்

சொன்னால் நம்பமாட்டீர்கள், ஆண்கள் பீட்ரூட் சாப்பிட்டால், பாலியல் வாழ்க்கை மேம்படுமாம். சமீப காலமாக ஆண்கள் அதிக அளவில் பாலியல் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். எனவே இதற்கு ஓர் இயற்கை வழியைக் கண்டுபிடிக்கும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட்டை சோதித்தனர். அதில் பீட்ரூட்டை ஆண்கள் சாப்பிடுவதால், பாலியல் பிரச்சனைகளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளுக்கு இணையாக பீட்ரூட் செயல்படுவது தெரிய வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. எனவே பாலுணர்ச்சி குறைவாக இருந்தாலோ அல்லது விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்பட்டாலோ, அதனை சரிசெய்ய பீட்ரூட்டை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். சரி, இப்போது பீட்ரூட் எப்படி ஆண்களின் பாலியல் பிரச்சனைகளை சரிசெய்கிறது என்று பார்ப்போம்.

பீட்ரூட் எப்படி உதவுகிறது? பீட்ரூட்டை சாப்பிடும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றமடைகிறது. பீட்ரூட்டை நன்கு மென்று விழுங்கும் போது, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களால் அது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, இரத்த நாளங்களை விரியச் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் ஆண்கள் தொடர்ந்து பீட்ரூட் சாப்பிட்டு வருவதன் மூலம், உடல் முழுவதும், குறிப்பாக பிறப்புறுப்புகளில் உள்ள இரத்த நாளங்கள் விரிந்து, இரத்த ஓட்டம் அதிகரித்து, பாலியல் பிரச்சனைகள் நீங்கி, படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும்.

இரத்த அழுத்தம் குறையும் பிரிட்டிஷ் இதய பவுண்டேஷனின் படி, நைட்ரேட்டுகள் அதிகம் உள்ள காய்கறிகளை உட்கொண்டு வந்தால், இரத்த அழுத்தம் குறையும் என்கின்றனர். மேலும் இதை ராணி மேரி பல்கலைகழகமும் 2010 ஆம் ஆண்டு சோதித்து மீண்டும் நிரூபித்துள்ளது.

500 கிராம் பீட்ரூட் அதுமட்டுமின்றி ஒருவர் தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், ஆறு மணிநேரத்திற்குள் இரத்த அழுத்தம் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆனால் இப்பிரச்சனையை பீட்ரூட் குறைப்பதால், ஆண்கள் தினமும் பீட்ரூட் சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, பாலியல் வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட முடியும்.

பச்சையாக பீட்ரூட்டை நன்கு சுத்தமாக நீரில் கழுவி, தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, சாலட்டுகளில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

வேக வைத்தது உங்களுக்கு பச்சையாக பீட்ரூட்டை சாப்பிட பிடிக்காவிட்டால், அதனை துண்டுகளாக்கி, வேக வைத்து, பின் அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து உட்கொண்டு வர, உடலில் நைட்ரேட்டுகளின் அளவு அதிகரிப்பதோடு, இரத்தணுக்களின் அளவும் அதிகரிக்கும்.

ஜூஸ் பீட்ரூட் இயற்கையாகவே இனிப்பாக இருப்பதால், இதனை ஜூஸ் செய்து குடிக்கும் போது, அதில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பீட்-ருட் ஜூஸ் செய்வதற்கு 2 சிறிய பீட்ரூட்டை எடுத்து, நன்கு கழுவி, தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி அப்படியே குடிக்க வேண்டும்.

07 1438925412 7 beetrootjuice

Related posts

பலாப்பழம் சாப்பிட்டால் உடனே இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.

nathan

சுவையான சத்துமாவு பாசிப்பருப்பு அடை

nathan

தெரிந்துகொள்வோமா? வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உதவும் 25 ஆரோக்கிய உணவுகள்!

nathan

இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! காய்கறிகள் வாடாமல் இருக்க இப்படி செய்யுங்கள்…!!

nathan

சுவையான கம்பு இடியாப்பம்

nathan

அதிமதுரம் பயன்கள்

nathan

சூப்பரான வெண்டைக்காய் பெப்பர் பிரை.! இன்றே செய்து பாருங்கள்..!

nathan

தெரிஞ்சிக்கங்க…கோடை வெயிலை தணிக்க உதவும் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்!!!

nathan