தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி – 200 கிராம்
வற்றல் மிளகாய் – 5
கடுகு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – அரைதேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
செய்முறை:
200 கிராம் புழுங்கல் அரிசியை வற்றல் மிளகாய், பெருங்கயம், சிறிது உப்பு சேர்த்து கொரகொரவென்று ஆட்டி கொள்ளவும்.
வானலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து ஆட்டிய மாவையும் சேர்த்து கிளறி கட்டியானதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைக்கவும்.
ஆவி பறக்கும் சுவையான தாளித்த கொழுக்கட்டை தயார்.