201611291150521021 cucumber tomato salad SECVPF
சாலட் வகைகள்

வெள்ளரிக்காய் – தக்காளி சாலட்

தினமும் உணவில் சாலட் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. அந்தவகையில் இன்று வெள்ளரிக்காய் – தக்காளி சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வெள்ளரிக்காய் – தக்காளி சாலட்
தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் (பெரியது) – ஒன்று,
நன்கு பழுத்த தக்காளி – 2 ,
பெரிய வெங்காயம் – ஒன்று,
எலுமிச்சைப் பழம் – ஒன்று,
மிளகுத்தூள் – சிறிதளவு,
வேர்க்கடலைப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்,
பாசிப்பருப்பு (பயத்தம்பருப்பு) – 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், கடுகு – தாளிக்கத் தேவையான அளவு,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெள்ளரிக்காயின் மேல் தோலை சீவி மெல்லிய, நீள துண்டுகளாகவும், தக்காளி, வெங்காயத்தை ஒரே அளவு துண்டுகளாகவும் நறுக்கிக்கொள்ளவும்.

* பாசிப்பருப்பை உதிர் உதிராக வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

* தக்காளி, வெங்காயம், வெள்ளரித் துண்டுகள், பாசிப்பருப்பு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போடவும். மேலே மிளகுத்தூள், உப்பு தூவவும்.

* எண்ணெயில் கடுகை தாளித்து சேர்க்கவும்.

* பரிமாறுவதற்கு சற்று முன் வேர்க்கடலைப் பொடியைத் தூவி, தேவையான அளவு எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். 201611291150521021 cucumber tomato salad SECVPF

Related posts

இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan

பூசணிக்காய் பழ ஷேக்

nathan

புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் – ஆரஞ்சு சாலட்

nathan

சுவையான ஃப்ரூட் சுண்டல்!….

sangika

ருசியான அனார்கலி சாலட்!…

sangika

வெங்காயத்தாள் தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan

வேர்க்கடலை சாட்

nathan

கேரட் சாலட் செய்வது எப்படி

nathan

ஆலு பன்னீர் சாட் செய்வது எப்படி….

nathan