Vaazaikkay puttu
சிற்றுண்டி வகைகள்

வாழைக்காய் புட்டு

தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 2
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 3
கறிவேப்பிலை
செய்முறை :
* வாழைக்காயை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வாழைக்காய் துண்டுகள் மூழ்குமளவிற்கு தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும்.

* வாழைக்காய் பாதி வெந்தும் வேகாத பதத்தில் எடுத்து ஆற விடவும். வாழைக்காய் சூடு ஆறினவுடன் தோலைச் சீவி விட்டு வாழைக்காய்ப்புட்டு அரிப்பில் துருவிக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் இட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிசம் செய்து வாழைக்காய் துருவியதைப் போட்டு உப்பு போட்டு வதக்கவும்.
* லேசாகத் தண்ணீர் தெளித்துக் கொள்ளவும். துருவப்பட்டிருப்பதால் சீக்கிரம் அடிப்பிடிக்கவும் வாய்ப்பிருப்பதால் அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறி வரவும்.
* பெருங்காயம் போட்டு நன்றாகக் கிளறி விடவும். புட்டு வெந்தவுடன் உப்பு சரி பார்த்து இறக்கவும்.
* சுவையான வாழைக்காய் புட்டு ரெடி.Vaazaikkay puttu

Related posts

சுவையான அரிசி பக்கோடா

nathan

கேழ்வரகு கொழுக்கட்டை

nathan

ரவை கொழுக்கட்டை

nathan

சத்தான சுவையான வெந்தயக்கீரை தோசை

nathan

கேரட் தோசை

nathan

சூப்பரான பேல் பூரி சாண்ட்விச்

nathan

வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி

nathan

சிதம்பரம் கொத்சு

nathan

மணத்தக்காளித் துவையல் செய்ய…..

nathan