30 C
Chennai
Saturday, Jul 26, 2025
tawa mushroom 17 1458202012
சைவம்

தவா மஸ்ரூம் ரெசிபி

மதியம் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று சற்று வித்தியாசமாக காளானை தவாவில் செய்து சுவையுங்கள். இது உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கும்.

மேலும் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது தவா மஸ்ரூம் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!

தேவையான பொருட்கள்: காளான் – 1 கப் (நறுக்கியது) குடைமிளகாய் – 1/4 கப் (நறுக்கியது) பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 1 (அரைத்தது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன் கரம் மசாலா – 1/4 டீஸ்பூன் உலர்ந்த வெந்தய கீரை – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது எண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு… எண்ணெய் – 2 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை: முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடேற்றி, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, பின் காளானை சேர்த்து மசாலா காளானில் ஒன்று சேர 3-5 நிமிடம் நன்கு காளான் வேகும் வரை கிளறி விட வேண்டும். அடுத்து அத்துடன் குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் பிரட்டி, வேண்டுமானால் சிறிது எண்ணெய் ஊற்றி கிளறி, அதோடு மிளகுத் தூள், உலர்ந்த வெந்தய கீரை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், தவா மஸ்ரூம் ரெடி!!!

tawa mushroom 17 1458202012

Related posts

ஐயங்கார் புளியோதரை

nathan

மாங்காய் வற்றல் குழம்பு

nathan

சிம்பிளான… டிபன் சாம்பார்

nathan

பருப்பு சாதம்

nathan

முட்டைகோஸ் சாதம்

nathan

புளிச்ச கீரை புளியோதரை

nathan

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி

nathan

சூப்பரான ஹைதராபாத் வெஜ் பிரியாணி

nathan

பேபி கார்ன் மசாலா

nathan