கேக் செய்முறை

குழந்தைகளுக்கு விருப்பமான கோகோ கேக்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இந்த கோகோ கேக்கை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு விருப்பமான கோகோ கேக்
தேவையான பொருட்கள் :

கோவா (இனிப்பு இல்லாதது) – 2 கப்,
மைதா – ஒரு கப்,
கோகோ பவுடர் – 5 டீஸ்பூன்,
சர்க்கரை – 4 கப்,
நெய் – சிறிதளவு.

செய்முறை :

* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் கோவா, 2 கப் சர்க்கரை, மைதா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறி, சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும்.

* மற்றொரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதமிருக்கும் கோவா மற்றும் சர்க்கரை, கோகோ பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறி, சுருண்டு வரும்போது இறக்கி, ஏற்கெனவே தட்டில் கொட்டிய கலவை மீது கொட்டி சமமாக பரப்பவும்.

* நன்றாக ஆறிய பின் துண்டுகள் போடவும்.

* கோகோ கேக் ரெடி.

Related posts

அரிசி மாவு கேக்

nathan

காபி  கேக்

nathan

முட்டை பப்ஸ் – Egg Puffs

nathan

கூடை கேக்

nathan

கோதுமை வாழை கேக்

nathan

ஸ்பாஞ்ச் கேக் : செய்முறைகளுடன்…!​

nathan

முட்டையில்லா டுட்டி ப்ரூட்டி கேக்

nathan

ஸ்பாஞ்ச் கேக்

nathan

உருளைக்கிழங்கு பான்கேக்

nathan