sl871
சைவம்

குடமிளகாய் சாதம்

குடமிளகாய் கலவை -2 கோப்பை
*வெங்காயம்- ஒன்று
*இஞ்சி-ஒரு துண்டு
*பூண்டு-நான்கு பற்கள்
*பச்சைமிளகாய்-நான்கு
*சீரகம்-ஒரு தேக்கரண்டி
*கடுகு-ஒரு தேக்கரண்டி
*கடலைப்பருப்பு-இரண்டு தேக்கரண்டி
*உளுத்தம் பருப்பு-இரண்டு தேக்கரண்டி
*பெருங்காயம்-அரைத் தேக்கரண்டி
*கொத்தமல்லி- கால் கோப்பை
*உப்பு-தேவைகேற்ப
*நெய்/எண்ணெய்-ஒரு குழிக்கரண்டி

*கடலைபருப்பு உளுத்தம்பருப்பை கழுவி வைக்கவும்.இஞ்சி பூண்டு பச்சைமிளகாயை அரைத்து வைக்கவும்.

*இரண்டு கோப்பை அரிசியை உதிரியாக வடித்து வைக்கவும்.வெங்காயம் மற்றும் குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

*வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு சீரகம் போட்டு பொரிந்ததும் கடலைபருப்பு உளுத்தம்பருப்பைப் போட்டு சிவக்க வதக்கவும்.

*பின்பு வெங்காயத்தைப் போட்டு சிவந்ததும் அரைத்த விழுதைப் போடவும்.பின்பு அதில் நறுக்கிய குடமிளகாய் மற்றும் உப்பு பெருங்காயத்தைப் போட்டு வதக்கி வேகவைத்த அரிசியைக் கொட்டி கிளறவும்.

*நறுக்கிய கொத்தமல்லி மற்றும் வறுத்த முந்திரி பருப்பால் அலங்கரித்து பரிமாறவும்.லஞ்சு பக்ஸுக்கு ஏற்ற சுவையான குட மிளகாய் சாதம் தயார்.sl871

Related posts

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் ஆலூ சப்ஜி

nathan

சூப்பரான ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காய்

nathan

சத்தான பட்டர் பீன்ஸ் – கேரட் பொரியல்

nathan

பத்திய சமையல் / கூரவு தோசை / கார சட்னி / புளி இல்லா கறி!

nathan

வெஜிடேபிள் புலாவ்

nathan

செட்டிநாடு பன்னீர் மசாலா

nathan

சுவை மிகுந்த கொண்டைக்கடலை புலாவ்

nathan

சுவையான முருங்கைக்காய் கூட்டு செய்வது எப்படி

nathan

வெங்காயத்தாள் கூட்டு செய்வது எவ்வாறு என்பதனை பார்ப்போம்!!

nathan