கேரட், கேழ்வரகு மாவு சேர்த்து சத்தான சுவையான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
சத்தான கேரட் – கேழ்வரகு ஊத்தப்பம்
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு – 1கப்
இட்லி மாவு – 1/4கப்
சின்ன வெங்காயம் – 5
கேரட் – 2
பச்சை மிளகாய் – 1
இஞ்சி – சிறுதுண்டு
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* கேரட்டை துருவிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, இட்லிமாவு, சிறிது உப்பு போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதம் கரைக்கவும்.
* அத்துடன் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, கேரட் துருவல் போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒருகரண்டி மாவு ஊற்றி சிறிது பரப்பிவிட்டு 1 ஸ்பூன் எண்ணெய் சுற்றி ஊற்றி மூடிவைத்து வேகவிடவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
* வெந்தவுடன் திருப்பிபோட்டு இருபக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.
* சுவையான கேரட் – கேழ்வரகு ஊத்தப்பம் ரெடி.