26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
201611071312246475 Beetroot curd Salad SECVPF
சாலட் வகைகள்

குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி

குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி செய்வது எப்படி என்பதை கீழே பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி
தேவையான பொருட்கள் :

பீட்ரூட் – 2
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் – ஒன்று
தயிர் – ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 1

தாளிக்க :

கடுகு – அரை தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை :

* பீட்ரூட் மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, இஞ்சி, பச்சை மிளகாயை போட்டு தாளித்த பின் அதனுடன் வெங்காயம், துருவிய பீட்ரூட்டை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.

* அடுத்து அதில் உப்புச் சேர்த்து வதக்கி வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

* ஆறியதும் அதனுடன் தயிரைச் சேர்த்துக் நன்றாக கலக்கவும்.

* சத்தான சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் தயிர் பச்சடி தயார்.201611071312246475 Beetroot curd Salad SECVPF

Related posts

சுவையான சத்தான வல்லாரைக் கீரை சாலட்

nathan

வேர்க்கடலை சாட்

nathan

ருசியான அனார்கலி சாலட்!…

sangika

சுவையான சத்தான பீட்ரூட் சாலட்

nathan

கிரீன் சாலட் வித் ஃப்ரெஞ்ச் டிரெஸ்ஸிங் (ஃபிரான்ஸ்)

nathan

சுவையான சத்தான தக்காளி சாலட்

nathan

வெங்காயத்தாள் தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan

பூசணிக்காய் பழ ஷேக்

nathan

வெள்ளரிக்காய் – தக்காளி சாலட்

nathan