தீபாவளிக்கு ஜாங்கிரியை கடையில் வாங்காமல் வீட்டியேயே எளிய முறையில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தீபாவளி ஸ்பெஷல் இனிப்பான ஜாங்கிரி
தேவையான பொருள்கள் :
உளுந்து – ஒரு கப்
சர்க்கரை – 3 கப்
ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
அரிசி மாவு – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
* வாய் அகன்ற பாத்திரத்தில் சீனியைப் போட்டு மூழ்கும் வரை தண்ணிர் ஊற்றி எசன்ஸ், சேர்த்து அடுப்பில் வைத்து பாகு தயாரித்து தனியாக வைக்கவும்.
* உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீர் தெளிக்காமல் நன்கு அரைக்கவும். கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு மாவை நன்றாக பந்து போல மென்மையாக கெட்டியாகும் வரை அரைக்கவும். அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
* வெள்ளை துணி அல்லது கெட்டியான பாலித்தின் கவரில் ஒரு சிறிய ஓட்டை போட்டு, அதில் மாவுக் கலவையை போட்டு, மூட்டை போல பிடித்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் குறைந்த தீயில் வைத்து, துணியில் உள்ள மாவை முதலில் வட்டமாகவும், பிறகு அதன் மேலேயே சிறு சிறு வட்டங்களாகவும் பிழிந்துவிடவும்.
* எண்ணெய் அதிகச் சூடாக இருக்கக்கூடாது.
* இருபக்கமும் வெந்ததும் அதாவது மொறுமொறுப்பாக வேகக்கூடாது. எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவிட்டு எடுக்கவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறினால் போதும்.
* சுவையான இனிப்பான ஜாங்கிரி தயார்.
* இந்த தீபாவளிக்கு கண்டிப்பாக ஜாங்கிரி செய்து பாருங்கள்.