26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
9991b24e 05f9 478e 89de 776c5a77e289 S secvpf
ஆரோக்கிய உணவு

கோதுமையை விட சிறந்த வரகு அரிசி

பண்டைய தமிழர்களால் அதிகளவில் உபயோகபடுத்தப்பட்ட சிறு தானியங்களின் பெயர்கள் கூட தற்போதைய தலை முறையினருக்கு தெரிவதில்லை.
சிறுதானியங்களில் முக்கியமானது வரகு. இது பண்டை தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்ட நிலையிலும்
செட்டிநாட்டுப் பகுதியில் சிறுதானியங்களில் பல விதமான பலகாரங்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
வரகு அரிசி, கோதுமையை விட சிறந்தது.இதில் நார்ச்சத்து அரிசி,கோதுமையை விட அதிகம்.வரகில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் ,இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்கள் கொண்டதாகும். இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது.
இதனை அரிசிக்கு மாற்றாக உபயோகப்படுத்தி இட்லி, தோசை, ஆப்பம், பனியாரம், பொங்கல், பாயாசம் என்று வகை வகையாக சமைத்து உண்ணலாம்.
இது பைட்டிக் அமிலம் குறைந்தும் நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்கள் கொண்டதாகவும் உள்ளது. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.
வரகு, பூண்டு, பால் கஞ்சி தினமும் காலை அருந்துவதன் மூலம், நோய்களை விரட்டி, உடலைத் திடகாத்திரமாக வைத்திருக்கலாம். நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.9991b24e 05f9 478e 89de 776c5a77e289 S secvpf

Related posts

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தனியா பொடி

nathan

தாய்மையை தடுக்கும் உணவுகள்! கவனம் தேவை

nathan

மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட்

nathan

ஜீரணத்தை எளிதாக்கும் ஸ்பெஷல் சீரக மோர் -தெரிஞ்சிக்கங்க…

nathan

ஏலக்காய் வியக்க வைக்கும் சமையல் மந்திரங்கள்.

nathan

கனிமச்சத்துக்களை கொண்டுள்ள பூசணி விதைகள் !!

nathan

நீரிழிவு நோயாளிகள் வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிடலாமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையானபலாப்பழ ரெசிபி

nathan

இந்த காய்கறிகள் உண்மையில் வித்தியாசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துமாம் தெரியுமா?

nathan