28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
sl3929
சிற்றுண்டி வகைகள்

ஒப்புட்டு

என்னென்ன தேவை?

பூரணத்துக்கு…

தேங்காய்த்துருவல் – 1 கப்,
பொடித்த வெல்லம் – 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் – சிறிது.

மேல் மாவுக்கு…

கோதுமை மாவு – 1 கப்,
மைதா மாவு – 1/2 கப்,
எண்ணெய் – 1/2 கப்.

எப்படிச் செய்வது?

ஒப்புட்டு செய்வதற்கு 5 மணி நேரம் முன்னதாகவே மேல் மாவு செய்து வைத்துக் கொள்ளவேண்டும். ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு போட்டு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு தளர பிசையவும். பிறகு பிசைந்த மாவு முழுகும் அளவு எண்ணெய் விடவும்.

பூரணத்திற்கு தேங்காய்த் துருவலை மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய்த்-்தூள் சேர்த்து கெட்டியாக தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். இந்த விழுதை அடிகனமாக உள்ள கடாயில் போட்டு நன்றாக கிளறவும். தேங்காய் பூரணம் கெட்டியாகும் வரை கிளறவும். ஆறிய பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். ஊறிய மாவை சற்று பெரிய உருண்டையாக கையில் எடுத்து வாழை இலையில் லேசாக தட்டவும். அதன்மேல் பூரணம் வைத்து மூடி கையில் எண்ணெய் தடவிக்கொண்டு வாழை இலையில் மெலிதாக தட்டவும். பிறகு சூடான தோசைக்கல்லில் போட்டு தேவைப்பட்டால் சுற்றிலும் சிறிது எண்ணெய் விடவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து அதன்மேல் சூடான நெய், வாழைப்பழம் வைத்து பரிமாறவும்.sl3929

Related posts

மட்டன் போண்டா

nathan

சுவை மிகுந்த மீன் கட்லெட்

nathan

தேங்காய் ரொட்டி

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கஸ்தா நம்கின்

nathan

கொத்தமல்லி துவையல் செய்வது எப்படி

nathan

மாலை நேர டிபன் ரவா கிச்சடி

nathan

கோஸ் பரோத்தா செய்வது எப்படி

nathan

சிக்கன் போண்டா

nathan

சத்தான பச்சைப்பயறு துவையல்

nathan