31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்து கொள்வது நல்லது. இப்போது கொள்ளு பொடி செய்வத எப்படி என்று பார்க்கலாம்.

கொள்ளு இட்லி பொடி செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

கொள்ளு – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – அரை கப்,
காய்ந்த மிளகாய் – 15,
பெருங்காயம் – ஒரு சிறு துண்டு,
கொப்பரைத் துருவல் – கால் கப்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். பெருங்காயத்தை பொரித்தெடுக்கவும். காய்ந்த மிளகாயை நிறம் மாறாமல் வறுத்தெடுக்கவும். கொப்பரைத் துருவலை சிவக்க வறுக்கவும். கொள்ளை சுத்தம் செய்து வெறும் வாணலியில் மொறுமொறுப்பாக வறுத்தெடுக்க வும். வறுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் ஆறியதும் ஒன் றாகக் கலந்து, உப்பு சேர்த்து சற்று கொரகொரவென்று பொடிக்கவும்.

இந்தப் பொடியுடன் நல் லெண்ணெய் கலந்து இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண் டால்… அசத்தல் சுவையில் இருக்கும். சூடான சாத்தில் எண்ணெய் விட்டு இதை கலந்து சாப்பிடலாம்.

Related posts

ஜாக்கிரதை! எடை குறைக்க ஓட்ஸ் சாப்பிடுறீங்களா? அப்ப கண்டிப்பா இத கவனத்துல வச்சிக்குங்க…

nathan

பிஸ்தா சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சத்துமாவு தயாரிக்கும் முறை ! இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.

nathan

தொப்பையைக் குறைக்க உதவும் தேங்காய் எண்ணெய்:

nathan

தினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மை

nathan

சுவையான திருநெல்வேலி சொதி

nathan

உங்களுக்கு அதிமதுரம் தேநீர் தயாரிப்பு முறையும், அதனை குடித்தால் உண்டாகும் 5 மருத்துவ நன்மைகள் தெரியுமா?

nathan

கால்சியம் அளவு சீராக சாக்லேட் பவுடர் சாப்பிட்டாலமா?

nathan

வாய்ப்புண், வயிற்றுபுண்ணை குணமாகும் கசகசா கஞ்சி

nathan