மாலையில் குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் பானிபூரியை வாங்கி வந்து, வீட்டிலேயே சாட் ஐட்டத்தை செய்து கொடுத்து அசத்தலாம்.
மாலை நேர ஸ்நாக்ஸ் பானிபூரி சாட்
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு – 4
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
புளித் தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கொத்தமல்லி சட்னி – 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கருப்பு உப்பு – 1 சிட்டிகை
ஓமப்பொடி – சிறிதளவு
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பௌலில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், சாட் மசாலா, கரம் மசாலா, மிளகாய் தூள், உப்பு மற்றும் கருப்பு உப்பை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* புளித் தண்ணீரில், கொத்தமல்லி சட்னி, உப்பு, பச்சை மிளகாயை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
* ஒரு பானிபூரியின் நடுவே உடைத்து, அதில் அந்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து அந்த பானிபூரியின் மீது இந்த புளித் தண்ணீரை ஊற்றி, ஓமப்பொடி, கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாற வேண்டும்.
* இப்போது சூப்பரான பானிபூரி சாட் ரெடி.
* அனைத்து பொருட்களையும் தயாராக வைத்து கொண்டு சாப்பிடும் போது தான் இதை செய்து தர வேண்டும்.