32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
மருத்துவ குறிப்பு

அம்மாவா, நானா, கணவன் மனைவியிடையே வரும் பிரச்சினையின் தீர்வு

அம்மாவா, நானா? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க” என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் எக்கச்சக்கம் என்கின்றனர் “மேரிடல் கவுன்சிலிங்” வல்லுனர்கள். இங்கிலாந்தில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம்.

அது வாழ்நாள் முழுதும் ஒரு விதமன அழுத்தத்தைக் கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது.

எனவே மாமியார் மருமகள் பிரச்சினை ஏதோ தமிழர்கள் பிரச்சினை என்று நினைக்கவேண்டாம். மாமியார்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஒரு சர்வதேசப் பிரச்சினை இது!

அவரது ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தங்கள் கணவன்மார் அம்மாப் பிள்ளையாக இருக்கிறார்கள் என குறைபட்டுக் கொண்டனர். அதே சமயம், மூன்றில் இரண்டு பங்கு மாமியார்களோ, தங்கள் பையன் தங்களை தனிமைப்படுத்துகிறான், பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான் என வருந்துகின்றனர்.

ஒவ்வொருவரும் அடுத்தவர் பார்வையில் பார்க்க ஆரம்பிக்கும் போது பல விஷயங்கள் எளிதில் புலனாகும். சிக்கல்கள் தீரத்துவங்கும். தன் பிள்ளை தன்னைக் கவனிக்கவில்லையே என அம்மா கவலைப்பட ஆரம்பிப்பதும், தன் கணவர் தன்னைக் கவனிக்கவில்லையே என மனைவி கவலைப்படுவதும்தான் பிரச்சனைக்ளுக்களை உருவாக்கும் முதல் புள்ளி.

அந்த சிந்தனையே வராமல் தடுத்தால் சிக்கலே இல்லை என்கிறார் ஒரு ஆலோசகர். அம்மாவிடம் மகன் பாசமாய் இருப்பது இயல்பே! அம்மாவிடம் பையன் பாசமாய் இருப்பது இயல்பு.

அப்படி இல்லாமல் இருந்தால் தான் கவலைப்பட வேண்டும். சரியாக வளர்க்கப்படாத மகன் சரியான பாதையில் செல்லாமல் இருக்க வாய்ப்பு அதிகம்.

எனவே அம்மாவின் மீது பாசமான பையன் என்பது ஒரு குறையல்ல. அது நல்ல விஷயம் எனும் எண்ணம் தான் முதலில் பெண்களுக்கு வரவேண்டும்.

“மனைவியா? அம்மாவா? யாருக்கு ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என ஆண் குழந்தைகளோட அம்மாக்களிடம் கேட்டுப் பாருங்கள்.

என் கணவன் எனக்கும், என் பிள்ளை அவனோட அம்மாவுக்கும் என்பார்கள். அதாவது எல்லா பெண்களுக்கும் தன் கணவன் தன்மீது அன்பு செலுத்த வேண்டும், அதே போல தனது மகனும் தன் மீது அன்பாய் இருக்க வேண்டும் எனும் ஆழமான ஆசை உண்டு.

கணவனைப் பொறுத்தவரை தனது மனைவியை அவன் முழுமையாக ஏற்று அன்பு செய்ய வேண்டும். அது தனது அம்மாவை நிராகரித்துத் தான் நடக்க வேண்டும் என்பதில்லை.

Related posts

மருதாணி இலையின் மகத்தான பயன்கள்

nathan

40 வயதில் தொடக்கத்தில் கண்களுக்கு சில எளிமையான பயிற்சிகள்

nathan

முருங்கைக்கீரை குழந்தையின்மை குறை போக்கும்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நரம்பு சுருட்டல் – கட்டுப்படுத்துவது எப்படி?

nathan

உங்க குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை எது தெரியுமா?

nathan

மாதவிடாய் சுழற்சி காலத்தில் நேப்கின்களால் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும் சில வழிகள்!

nathan

120 நாட்கள் தொடர்ந்து கறிவேப்பிலையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

நரம்பு தளர்ச்சியை குணமாகும் வசம்பு

nathan

வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவழிக்க சில டிப்ஸ்

nathan