30.3 C
Chennai
Saturday, Jun 15, 2024
1426480183 8821
சைவம்

பருப்பு முள்ளங்கி வறுவல்

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி – 2
கடலைப்பருப்பு – அரை கப்
கொத்துமல்லி, கறிவேப்பிலை -பொடியாக நறுக்கியது
மிளகாய், தனியா, மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி
சர்க்கரை – அரை தேக்கரண்டி
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய், பெருங்காயம், கடுகு, சீரகம் – தாளிக்க
உப்பு – தேவையாள அளவு

செய்முறை:

முதலில் கடலைப் பருப்பை கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் முள்ளங்கியை தோல் சீவி சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி போட்டு தாளிக்கவும். மேலும் வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதில் உப்பு, மஞ்சள், தனியா, மிளகாய் பொடிகளை சேர்க்கவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் பருப்பு மற்றும் முள்ளங்கியை சேர்த்து வேக வைக்கவும். பின்னர் சர்க்கரை, புளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறிவிட்டு இறக்கவும். இதில் நீங்கள் விரும்பும் எந்த காய்கறியையும் சேர்த்துக் கொள்ளலாம். 1426480183 8821

Related posts

சத்தான திணை முருங்கைக்கீரை சப்பாத்தி

nathan

காளான் குழம்பு

nathan

சூப்பரான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

nathan

தர்பூசணிப் பொரியல் செய்யலாம் வாங்க…..!

nathan

உடல் சூட்டை தணிக்கும் பழைய சாதம்

nathan

சோயா மட்டர் புலாவ்|soya matar pulao recipe in tamil

nathan

முளைக்கீரை தயிர்க்கூட்டு செய்வது எப்படி

nathan

தயிர் சாதம் பிராமண சமையல்

nathan

தேங்காய்ப்பால் பேபி கார்ன் புலாவ்

nathan