பண்டிகை மற்றும் சீசன்களுக்கு ஏற்ப புதிய நவீன வசதி ஆடைகள் அரங்கேறுவது அதன்மீது பெண்கள் ஈர்ப்பு கொள்வதும் வாடிக்கையே.
நவீன மங்கையர் விரும்பும் டியூனிக் குர்தாக்கள்
பண்டிகை கால கொண்டாட்டத்திற்கு ஏற்ப பெண்கள் அணியும் ஆடை புதிய அவதாரம் எடுக்கின்றன. அந்த அந்த பண்டிகை மற்றும் சீசன்களுக்கு ஏற்ப புதிய நவீன வசதி ஆடைகள் அரங்கேறுவது அதன்மீது பெண்கள் ஈர்ப்பு கொள்வதும் வாடிக்கையே.
நவீன யுவதிகள் மற்றும் மங்கையர்களுக்கு ஏற்ப தற்போது புதிய டிரெண்டில் ஆடை வடிவமைப்புகளும், வண்ண போர்வையும் சேர்ந்த ஆடைகள் வரத் தொடங்கியுள்ளன. பெண்கள் எத்தனை ஆடைகள் புதியதாக வந்தாலும் அதனை அழகிற்கு அழகு சேர்க்கும் நவீன ஆடைகள் உலகளவில் ரசனைக்கு ஏற்பவும், தேசிய மற்றும் பிராந்திய அளவின் ரசனைக்கு ஏற்பவும் தனிப்பட்டவாறு அணிவகுக்கின்றன.
பெண்கள் ஆடையில் 60 களில் மிக பிரபலமாக இருந்த மத்திய உயர டியூனிக் என்ற குர்தா டைப் மேல்சட்டை இன்றைய நாளில் புதிய அவதாரம் எடுத்து வந்துள்ளது. இந்த டியூனிக் வகை மேல்சட்டை உடலோடு மிக கச்சிதமாக பொருந்தியவாறு கால்முட்டி பகுதிவரை நீண்டவாறு இருக்கும். இன்றைய நாளில் இந்த டியூனிக் வகை மேல்சட்டையை பேண்ட் மற்றும் முழு நீள ஸ்கர்ட்களுக்கு ஏற்றவாறு உள்ளன.
வண்ணமயமான பிரிணிடட் டியூனிக் :
சர்வதேச அளவில் புதிய நவீன வடிவமைப்பாய் பிரபலமாக உள்ள பிரிணிடட் டியூனிக் இன்றைய நவீன யுவதியருக்கு ஏற்றது. வண்ணமயமாய் களைபோஸ் கோபிக் வடிவிலான பிரிணிடட் டியூனிக் மேல்சட்டை பெண்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் தருகிறது எனலாம். மெத்தென்ற துணியின் மீது அழகிய பிரகாச வண்ணத்தில் மயிலிறகு, பறவை இறகுகள் போன்றவை ஓவியமாக பதியப்பட்டுள்ளன. மேலும் இந்த வகை டியூனிக் மேல்சட்டை புதிய வடிவமைப்பாய் முன்புற சற்று மேலும் பின்புறம் கீழிறங்கியும் ஹை-லோ என்றவாறும் வருகின்றது.
குட்டை டியூனிக் சட்டைகள் :
நீளமான டியூனிக் சட்டைகள் போன்று குட்டை வடிவிலும் டியூனிக் சட்டைகள் கிடைக்கின்றன. இவற்றிலும் சரிகை வேலைப்பாடு பிரிணிடட் என்பதுடன் கீழ் பகுதியில் சற்று பிரில் வைத்தவாறும் வருகின்றன. இந்த குட்டை டியூனிக் சட்டைகள் ஜீன், லெக்கின்ஸ், லெக்கின்ஸ் பேண்ட் வகைகளுடன் சேர்த்து அணிய ஏற்றதாக உள்ளது. டியூனிக் என்பது குர்தா டைப் ஆடையாக இருந்தாலும் புதிய வடிவில் புதிய பெயருடன் பெண்களை நோக்கி அணிவகுத்து வருகின்றன.
மெல்லிய தோற்றம் தரும் அழகிய டியூனிக் :
இந்த பண்டிகை காலத்திற்கு ஏற்ப புதிய பரிணாமம் பெற்றிருக்கும் டியூனிக் வகை மேல்சட்டை பல வண்ணங்களில் பல டிசைன்களில் கிடைக்கின்றன. ஸ்லிவ் லெஸ் வகையாக வரும் டியூனிக் மேல்சட்டை, சில மாடல்களில் மட்டும் சட்டை போன்ற கை வைத்தும் வருகின்றன.
கச்சிதமான உடலமைப்பு தோற்றத்தை தருவதுடன் ஒல்லியான தேகம் போன்ற அமைப்பையும் இந்த மேல்சட்டை தருகிறது, அதிகமான வண்ண கலப்பின்றி ஒன்றை வண்ண பின்னணியில் மேல்புறம் சரியாக நூற்களால் வேலைப்பாடு செய்யப்பட்டது டியூனிக் இதன் வடிவமைப்பு விழாக்காலத்திற்கு ஏற்றவாறு உள்ளதுடன் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்ல ஏற்றவாறு உள்ளது.
அலுவலகம் செல்வோர் அணிய ஏற்ற பட்டன்-டைப் டியூனிக் :
அலுவலகம் சார்ந்த பணிகளில் ஓர் உயர் அந்தஸ்துடன் அணிய ஏற்றவாறு பளபளப்பு துணி வகையில் நடுப்பகுதி வரிசையில் பட்டன்கள் பொருத்தப்பட்ட டியூனிக் கோர்ட் டைப்பில் இருந்தாலும் இதன் அழகிய தோற்றம் கூடுதல் கவர்ச்சியை தருகிறது.
கை வைத்த சட்டை அமைப்பில் பலோகோ மற்றும் லெக்கின்ஸ் வகை பேண்ட்க்கு இணையாக அணிய ஏற்றது.