உட்கார்ந்து கொண்டே இருப்பது, பல மணி நேரம் உட்கார்ந்து கொண்டு இருப்பது இருதயத்திற்கு மிகப் பெரிய பாதிப்பினை அளிக்கும்.
இருதயத்தை பாதுகாக்கும் வழிகள்
நமது சில பழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ளும் பொழுது அது மிகப் பெரிய உதவியினை நம் இருதயத்திற்குச் செய்கின்றது.
* உட்கார்ந்து கொண்டே இருப்பது, பல மணி நேரம் உட்கார்ந்து கொண்டு இருப்பது இருதயத்திற்கு மிகப் பெரிய பாதிப்பினை அளிக்கும். நீங்கள் உடற்பயிற்சி செய்பவராய் இருந்தால் கூட தொடர்ந்து சில மணி நேரங்கள் உட்கார்ந்த படியே இருந்தால் இருதய பாதிப்பு ஏற்படும். இப்படி அசையாது இருப்பது ரத்தத்தில் கொழுப்பினையும், சர்க்கரை அளவினையும் கூட்டி விடும். ஆக சுறு சுறுப்பாக இருங்கள். டிவி முன் மணிக்கணக்காய் அமர்ந்து இருப்பவர்கள் இனியாவது மாறுவார்களாக.
* சதா மனஉளைச்சல், சோகம், வேதனை என்று இருப்பவர்களுக்கு இருதய பாதிப்பு அபாயம் அதிகம் உண்டு. ஆக இதற்கான தீர்வை அவர்கள் குடும்ப நபர்கள் மூலமோ அல்லது நண்பர்கள் மூலமோ பெறுவது நல்லது.
* மிக அதிக குறட்டை விடுபவரா? இவரால் மற்றவருக்கு பிரச்சினை என்று நினைக்கலாம். ஆனால் இது குறட்டை விடுபவருக்கு அதிக ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தலாம். அதிக எடை உடையோர், எடை அளவாக உடையோர் இருவருக்குமே இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பொதுவில் குறட்டை விடுபவர்கள் காலையில் மிகவும் சோர்வாகவே எழுந்திருப்பார்கள். இவர்களுக்கு தூக்கத்தில் மூச்சு விடும் இயக்கம் நின்று விடலாம். இதுவும் இவர்களுக்கு ஆபத்தே. ஆகவே மருத்துவ உதவி பெற்று இதனை சரி செய்து கொள்க.
* ஈறுகளின் நோய்க்கும் இருதய பாதிப்பிற்கும் தொடர்பு இருக்கின்றது. இந்த கிருமி உடலில் வீக்கத்தினை ஏற்படுத்துகின்றது. இதனால் ரத்தக் குழாய் தடித்து உள்ளே அடைப்பும் ஏற்படலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆக ஈறுகள் நோயின்றி காப்பது சீரான ரத்த ஓட்டத்தினை அளிக்கும்.
* அதிக உணவு, அதிக கார்போஹைடிரேட் உணவு அதாவது எப்பொழுதும் இட்லி, தோசை, சாதம் என்று இருக்காதீர்கள்.
இருதயத்திற்கான உணவு
* நீங்கள் மீன் சாப்பிடுபவர் என்றால் நிச்சயம் மீன் எடுத்துக் கொள்ளலாம். மீன் ஒமேகா-3 சத்து அதிகம் கொண்டது. நீங்கள் சைவம் எனில் ப்ளாக்ஸ் விதைகள், ஒமேகா 3 மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள்.
* ஒரு கைப் பிடி பாதாமோ, வால் நட்டோ ஸ்நாக்ஸ் நேரத்திற்கு நேரம் எடுத்துக் கொள்ளலாம்.
* கொழுப்பு அதிகம் இல்லாத தயிர் நல்லது.
* ஓட்ஸ் தினம் காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* அடர்ந்த பீன்ஸ், கறுப்பு, ராஜமா இவை நார் சத்து கொண்டவை. வைட்டமின் பி சத்துகள், தாது உப்புகள் கொண்டவை.
* சோயா பன்னீர் எனப்படும் ‘டோபு’ நல்லது.
* சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறம் கொண்ட காய்கறிகள்.
* பசலை கீரை சிறந்தது.
* பப்பாயா, ஆரஞ்சு இவை பீட்டா கரோடின், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் நார் சத்து கொண்டவை.
* தக்காளி
* அடர்ந்த சாக்லேட். இதில் 70 சதவீதம் கோகோ உள்ளது.
* ப்ரோகலி – வைட்டமின் சி, ஈ மற்றும் பொட்டாசியம், ஃப்போலேட், கால்சியம், நார் சத்து கொண்டது.
* மாவு சத்து உணவின் அளவினை குறைத்து விடுங்கள்.
* பூண்டு
* ஆலிவ் எண்ணெய்
* முழு தானியங்கள்
* வறுத்து, பொரிக்காத, வேக வைத்த உருளை உங்கள் உடலின் மிக முகியமான தசைக்கு கூடுதல் கவனம் தேவை. அந்த தசைதான் இருதயம். நாம் உயிரோடு மிக கடுமையாக ஓயாது உழைக்கும் உடல் உறுப்பு.
* சுமாராக நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் தடவை துடிக்கின்றது. அதாவது நிமிடத்திற்கு 60-100 முறை துடிக்கின்றது. நாள் ஒன்றுக்கு 86,000 முதல் 1,44,000 முறை துடிக்கின்றது.
* உடல் ஆரோக்யமும், வயதும் இருதயம் நன்கு இயங்குவதற்கு ஒரு காரணம்.
* இருதய நோய் ஆணின் மரணத்திற்கு மட்டும் முதல் காரணமாக இருப்பதில்லை. பெண்ணின் மரணத்திற்கும் முதல் காரணமாக இருக்கின்றது. நாள் ஒன்றுக்கு மாரடைப்பு, இருதய நோய்கள், வாதம் இவற்றால் இறக்கும் பெண்களின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
* நீங்கள் தூங்கும் பொழுது உங்கள் இருதய துடிப்பு குறைகின்றது. உங்கள் நரம்பு மண்டலம் இருதய துடிப்பினை குறைத்து உங்களை ‘ரிலாக்ஸ்’ செய்ய வைக்கின்றது.
* மாரடைப்பு ஏற்படும் ஆண் அழுத்தும் நெஞ்சுவலி, வியர்வை, வயிற்றுப் பிரட்டல் என குறிப்பிடுவான். மாரடைப்பு ஏற்படும் பெண் மூச்சு வாங்குதல், தலைசுற்றல் அல்லது மயக்கம், மார்பின் கீழ் (அ) வயிற்றின் மேல் வலி, மேல் முதுகு வலி என்று கூறுவாள்.
* யோகா ஸ்டிரெஸ் அளவினை வெகுவாய் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் இருதய பாதிப்பு வெகுவாய் குறைகின்றது.
* யோகா உயர் ரத்த அழுத்தத்தினை குறைப்பதன் மூலம் இருதயத்தினை காக்கின்றது.
* யோகா முறையற்ற இருதய துடிப்பினை சீர் செய்ய உதவுகின்றது.
* இருதயத்தின் முதல் செல் கருவின் 4-வது வாரத்தில் இருந்து துடிக்க ஆரம்பிக்கின்றது.
* வாய் விட்டு சிரித்தால் இருதய நோய் விட்டு போகும் என்பது 100 சதவீதம் உண்மை
* ஒரு நிமிடத்திற்கு 1.5 காலன் அளவு ரத்தத்தினை இருதயம் பம்ப் செய்கின்றது.
* வாழ்நாளிலேயே மிக அதிகமாக வேலை செய்யும் தசை இருதயம் தான்
* ஆணை விட பெண்ணுக்கு நிமிடத்திற்கு 8 முறையாவது இருதயம் கூடுதலாகத் துடிக்கின்றது.
* தினமும் உங்கள் இருதயம் உருவாக்கும் சக்தி ஒரு ட்ரக் வண்டியினை 20 கி.மீ தூரம் ஓட்டும்அளவாகும்.
* இருதயத்திற்கு சுய மின்சார உந்து விசை இருப்பதனால் ஆக்ஸிஜன் இருந்தால்இருதயத்தினை உடலிலிருந்து தனித்து எடுத்துவிட்டாலும் இயங்கும்
* பெண்களுக்கு நெஞ்சுவலி, வயிற்று பிரட்டல், தோள்வலி இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்லவேண்டும்.
* சைவ உணவு உட்கொள்பவர்கள் அசைவ உணவு உட்கொள்பவர்களை விட 19 சதவீதம் குறைவாக இருதய பாதிப்பு அடைகின்றனர்.
* அடர்ந்த சாக்லேட் சிறிது உண்பது இருதய நோயினை மூன்றில் ஒருபங்கு குறைக்கும்.
* புகைபிடிப்பவர்களுக்கு புகை பிடிக்காதவர்களை விட 200 சதவீதம் முதல் 400 சதவீதம் வரை அதிகமாக மாரடைப்பு ஏற்படுகின்றது.
* தினம் 11 மணி நேரம் வேலை செய்பவர்கள் தினம் 8 மணி நேரம் வேலை செய்பவர்களை விட 67 சதவீதம் அதிகமாக மாரடைப்பு பாதிப்பு அடைகின்றார்கள்.
* ஆய்வுகள் கூறுவது சுகாதார பற்களால் கிருமிகள் இரத்த ஓட்டத்தில் கலந்து அதனால் இருதயத்தினையும் அடைகின்றன. இதனால் பல இருதய நோய் தாக்குதல்கள் ஏற்படுகின்றன.
* தினம் 5 மணி நேரம் மட்டுமே தூங்குபவர்கள் 30 சதவீதம் கூடுதலாக அதிக இருதய நோய்களை பெறும் வாய்ப்பில் உள்ளனர். தூக்கமின்மையால் இரத்த குழாய்களில் இரத்த அழுத்தம் கூடுகின்றது. இரத்தத்தில் சர்க்கரை அளவு மாறுபடுகின்றது. இதனால் இருதய நோய் பாதிப்புகளும் கூடுகின்றன. எட்டு மணி நேரம் நல்ல தூக்கம் பெறுபவர்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனர்.
* முறையாக இரத்த அழுத்த பரிசோதனை அடிக்கடி செய்து கொள்பவர்களுக்கு இருதய பாதிப்பினை ஆரம்ப காலத்தில் அறிந்து சிகிச்சை அளிக்க எளிதாகின்றது.
இருதயத்தினை பாதுகாக்க எளிதான வழிகள் :
* வருடாந்திர மருத்துவ பரிசோதனை நீங்கள் எந்த அளவு ஆரோக்கியமாக இருக்கின்றீர்கள் என்பதை காட்டி விடும். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் என்பதனை உணருங்கள். உங்கள் இரத்த கொதிப்பு, சர்க்கரை அளவு, கொலஸ்டிரால் அளவு இவற்றினை உங்கள் பிறந்த நாள் வரும் பொழுது பரிசோதித்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு நீங்களே தந்து கொள்ளும் பரிசு.
* உப்பின் அளவினை சற்று குறைத்துக் கொள்ளுங்கள்.
* அன்றாட வேலைகளை உடற்பயிற்சி போல் ஆகட்டும். கைவீசி நடங்கள். படி கட்டு ஏறி இறங்குங்கள். டிவி பார்க்கும் பொழுது 15 நிமிடம் அறைக்குள்ளேயே நடைபயிற்சி செய்யுங்கள்.
* வீடு பெருக்கி துடையுங்கள்.
* ஜன்னல், கதவுகளை நன்கு சுத்தம்செய்யுங்கள்
* குழந்தைகளை பார்க்கிங் கூட்டி சென்று விளையாடுங்கள்
* இரவு உணவுக்குப் பிறகு சிறிது நடை பயிற்சி செய்யுங்கள்
* யோகா அல்லது ஸ்ட்ரெட்க் பயிற்சி செய்யுங்கள்
* ரிமோட் உபயோகிப்பதை நிறுத்தி எழுந்து நடங்கள்
* எங்கு சென்றாலும் கையில் ஒரு குடிநீர் பாட்டிலுடன் செல்லுங்கள். அவ்வப்போது சிறிது தண்ணீர் குடியுங்கள்.
* நொறுக்கு தீனி வீட்டில் இருக்கவே வேண்டாம். காய்கறிகளும், பழங்களும் கண்ணெதிரே இருக்கட்டும்.
* கொழுப்பு இல்லாத உணவினை பழக்கத்தில் கொண்டு வாருங்கள்
* எலுமிச்சை ஜூஸ், தர்பூஸ், டீ போன்றவற்றினை பொறுமையாய் அருந்துங்கள்
* மற்றவர்களுடன் அமர்ந்து உண்ணுங்கள். தனியாக உண்டால் நாம் அதிகமாக உட்கொள்வோம்.
* சிகரெட் பிடிப்பதனை உங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும், விட்டு விடுங்கள்.
* உங்களுக்கு சரியான எடை எது என்பதனை அறிந்து அதனை கடை பிடியுங்கள்
* ஆக்கப்பூர்வமாகவே இருங்கள்
* உங்களின் இந்த சாதனைகளை நீங்களே மனதினுள் பாராட்டி மகிழுங்கள்
* உங்கள் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை உங்கள் மனம் போனபடி மாற்றாதீர்கள். இதனால் ஆபத்து, பாதிப்பு உங்களுக்கே.
* உடல் சொல்லும் சின்ன அறிகுறிகளை ஒதுக்காதீர்கள்.
உங்கள் இதயம் ஆரோக்கியமாகவே இருக்கும்.