28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
sl3909
சிற்றுண்டி வகைகள்

மிளகு பட்டர் துக்கடா

என்னென்ன தேவை?

சிறுதானிய மாவு – 1 கப் (காதி கடையில் ரெடிமேடாக கிடைக்கும்),
மைதா – 1/2 கப்,
கோதுமை மாவு – 1/2 கப்,
மிளகுத்தூள் (கரகரப்பாக பொடித்தது) – 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிது,
உப்பு – தேவைக்கேற்ப,
ரவை – 1/4 கப்,
நெய் (அ) வெண்ணெய் – 1/2 கப்,
வெள்ளை எள் – 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் நெய் அல்லது வெண்ணெயில் உப்பு சேர்த்து நுரைத்து வரும்வரை குழைக்கவும். இதில் சிறுதானிய மாவு, மைதா, கோதுமை சேர்த்து விரல் நுனியால் நன்றாக பிசறிக்கொண்ேட இருந்தால் ரொட்டித் தூள் மாதிரி வரும். அப்போது, கரகரப்பாக உடைத்த மிளகு, பெருங்காயத் தூள், ரவை, எள் சேர்த்து கலந்து தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டியாக பிசையவும். சிறிது நேரம் மூடி வைக்கவும். 5 நிமிடத்திற்குப் பின் பிசைந்த மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து சப்பாத்திக்கல்லில் அரை இன்ஞ் கனமாக தேய்த்து குறுக்கும் நெடுக்குமாக சிறுசிறு துண்டுகள் விருப்பமான வடிவத்தில் வெட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். sl3909

Related posts

குழந்தைகளுக்கு பிடித்தமான சென்னா சாட்

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் ஸ்பைஸி சிக்கன் போண்டா

nathan

கோயில் வடை

nathan

கறிவேப்பிலை பொடி மினி இட்லி

nathan

ஆப்பிள் பேரீச்சம்பழ கீர்

nathan

வெண்டைக்காய் சிப்ஸ்

nathan

சூப்பரான பீட்ரூட் வடை

nathan

சத்தான மிளகு அடை

nathan

உப்புமா

nathan