25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
ஆரோக்கியம்எடை குறைய

எடையை குறைக்கும் ‘பழுப்பு கொழுப்பு’

ld801பழுப்புக் கொழுப்பு’ என்ற அதிசயத் திசுவை ஆய்வகத்தில் வளர்த்திருக்கிறார்கள், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். இந்தக் கொழுப்பு, மனிதர்கள் குண்டாவதைத் தடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபடுகிறது.

* இந்தத் திசு, சக்தியை எரித்து வெப்பத்தை உண்டாக்குகிறது. மனித உடம்பில் பொதுவாகக் காணப்படும் `வெள்ளைக் கொழுப்பு’, அடிப் படையில் சக்தி சேமிப்பாகும். மனித உடம்பில் வெள்ளைக் கொழுப்பு அதிகரிக்கும்போது அத்தகையவர்கள் குண்டாகும் வாய்ப்புக் கூடுகிறது. அதேநேரம் இந்தப் பழுப்புக் கொழுப்போ வெப்பத்தை உற்பத்தி செய்கிறது.

* சுமார் 50 கிராம் வெள்ளைக் கொழுப்பு, 300 கிலோகலோரி சக்தியைச் சேமித்து வைக்கிறது. மாறாகப் பழுப்புக் கொழுப்பு ஒரு நாளைக்கு 300 கிலோ கலோரியை எரிக்கிறது.

* இந்தக் கொழுப்பை வளர்த்துக் காட்டியிருப் பவர்கள், ஆஸ்திரேலியா சிட்னியில் உள்ள கேவன் மருத்துவ ஆராய்ச்சி மைய ஆய்வுக் குழுவினர். வயதுக்கு வந்த நபர்களிடம் இருந்து பெறப்பட்ட ஸ்டெம்செல்களில் இருந்து `கல்ச்சர்’ முறையில் வளர்த்து பழுப்புக் கொழுப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.

* இதன் மூலம், எதிர்காலத்தில் ஒருவருக்கான பழுப்புக் கொழுப்பை வெளியே வளர்த்து அவரது உடம்பில் செலுத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

* டாக்டர் பால் லீ, பேராசிரியர் கென் ஹோ தலைமையிலான ஆய்வுக் குழுவினர், பழுப்புக் கொழுப்பு இருக்கிறதா என்று 6 பேரை ஆய்வு செய்தனர். அவர்களில் இரண்டு பேரிடம் மட்டும் அந்தக் கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்டது, வெளியே வளர்க்கப்பட்டது.

* “தற்போது ஆரம்பகட்டம்தான் என்றாலும், பழுப்புக் கொழுப்பை வெளியே வளர்ப்பது சாத்தியம் என்பதை இது காட்டியிருக்கிறது. வயது வந்த ஆட்களிடம் இருந்து எடுக்கும் `பிரிகர்ஸர்’ செல்களை சரியான முறையில் தூண்டி வளர்த்து பழுப்புக் கொழுப்பை உருவாக்க முடியும்” என்றார் டாக்டர் லீ.

உடம்பில் பழுப்புக் கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் எடை போடுவதில்லை. அவர்களது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவும் குறைவாக இருக்கிறது.

Related posts

பட்டினி கிடந்தால் உடல் எடை குறையாது

nathan

உடற்பருமனை குறைக்க Dr.க.சிவசுகந்தன் இன் நீங்கள் செய்யவேண்டியவை சில தகவல்கள்

nathan

30 நாட்களில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

உங்க ஃபேவரட் ஹீரோயினோட வெயிட் குறைக்கிற சீக்ரட் தெரிஞ்சிக்கணுமா?

nathan

எச்சரிக்கும் ஆய்வு..’குழந்தைகளுக்கு அதிகளவு இனிப்பு கொடுக்காதீர்கள்’

nathan

உங்கள் எடை குறையாததற்கு இதெல்லாம்தான் காரணம்!!

nathan

நீங்கள் இதிக உப்பு பாவனையாளரா? அப்போ கட்டாயம் இத படிங்க!

sangika

ஒரு சில உடற்பயிற்சிகளை செய்தால் கொஞ்சம் உயரமாக வளர உதவும் என்னவென்று பார்க்கலாம்.

nathan

உடல் எடை குறைய என்ன உணவுகளை சாப்பிடலாம்

nathan