28 C
Chennai
Wednesday, Aug 12, 2026
ஆரோக்கியம்உடல் பயிற்சி

அடிவயிற்றில் வலிமை தரும் பயிற்சி

ee17c91a-174c-4849-a639-602afc3f1f1f_S_secvpfவயிற்று பகுதி உள்ள அதிகப்படியான சதையை குறைக்கவும், வயிற்று பகுதியை வலிமையடைய செய்யவும் இந்த பயிற்சி உதவுகிறது. இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் முதுகு பகுதிக்கு நல்ல வலிமை தருகிறது.

இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி படுத்துக் கொள்ளவும். கால்களை முட்டி வரை மடக்கி, கால் முட்டிகளுக்கு இடையே ஸ்விஸ் பந்தை வைத்து அதன் மேல் கால்களை பேலன்சாக (படத்தில் உள்ளபடி) வைக்கவும்.

இப்போது கால் ஸ்விஸ் பந்தின் மேல் இருக்கும். உடல் தரையில் இருக்கும். இந்த நிலையில் கைகளை நேராக மேலே தூக்கி தோள்பட்டை வரை மேலே தூக்கவும். தலை மேலே தூக்கியபடி பார்வை மேல் நோக்கி இருக்க வேண்டும்.

இந்த நிலையில் 150 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இந்த பயிற்சி செய்யும் போது உங்கள் வயிறு அசைவதை உணர முடியும். அப்படி தெரிந்தால் நீங்கள் சரியாக பயிற்சி செய்கிறீர்கள் என்று அர்த்தம்.

இவ்வாறு 10 முதல் 15 முறை செய்யவும். இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் வயிற்று பகுதியில் உள்ள அதிகப்படியான சதை குறைந்திருப்பதை காணலாம்.

Related posts

உடற்பயிற்சி செய்யும் போது தண்ணீர் அருந்தலாமா?

nathan

ஸோஹம் தியானத்தை தொடர்ந்து செய்து வந்தால் சக்கரங்களின் ஆற்றல் அதிகரிக்கும்

sangika

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு எளிய பயிற்சி! — உடற்பயிற்சி

nathan

பர்வதாசனம்

nathan

வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பைக் குறைக்க

nathan

எவ்ளோ பெரிய தொப்பையையும் மாயமாக்க, கொள்ளை இப்படி பயன்படுத்துங்கள்.!

nathan

நீண்ட நேர தாம்பத்தியம் அமைய இதை செய்யுங்கள்!

nathan

பெண்களுக்கு ஏற்படும் அபாயகரமான வியாதி களை தொடக்கத்திலேயே முறிந்து போக இத செய்யுங்கள்!….

sangika

தாய்மார்கள் கவனிக்க வேண்டியதும், குழந்தைகளுக்கு சளி, இருமலை தவிர்க்க வேண்டிய வழிமுறைகள்

nathan