sl3851
இனிப்பு வகைகள்

கலந்த சத்து மாவு பர்பி

இது ஒரு கிராமத்து டிஷ்.

என்னென்ன தேவை?

வரகு, சாமை,
தினை, கம்பு, சோளம் தனித்தனியாக
மாவாக அரைத்து அல்லது
இவை எல்லாம் கலந்த
ரெடிமேட் மாவு – 2 கப்,
நாட்டுச்சர்க்கரை – 1 கப்,
சூடான பால் – 1 கப்,
நெய் – 1 கப்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
உடைத்த முந்திரி – சிறிது

எப்படிச் செய்வது?

அடிகனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு மாவை லேசாக பொன்னிறமாக நெய் பிரிந்து வரும் வரை வறுக்கவும். இத்துடன் பதப்படுத்திய சுத்தமான நாட்டுச்சர்க்கரை, கெட்டியான பால், முந்திரி சேர்த்து நன்றாக கிளறவும். மிதமான தீயில் கைவிடாமல் கிளறிக் கொண்டே, இடை இடையே நெய் விடவும். இது சிறிது சுருண்டு வரும் போது ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி ஆறிய பின் வில்லைகளாக வெட்டவும்.sl3851

Related posts

பருப்பு போளி எப்படிச் செய்வது?

nathan

பாதுஷா

nathan

கோதுமை ரவா கேசரி

nathan

அதிரசம், முறுக்கு.. தேங்காய் பூ லட்டும், பளபள பாயசமும்.. ரெசிப்பி கார்னர்

nathan

சுவையான ரவா கேசரி செய்முறை விளக்கம்.

nathan

சுவையான பீட்ரூட் அல்வா

nathan

சுவையான மைசூர் பருப்பு தால் செய்வது எப்படி

nathan

விளாம்பழ அல்வா

nathan

ரசகுல்லா

nathan