29.4 C
Chennai
Friday, Jul 10, 2026
இனிப்பு வகைகள்

கலந்த சத்து மாவு பர்பி

இது ஒரு கிராமத்து டிஷ்.

என்னென்ன தேவை?

வரகு, சாமை,
தினை, கம்பு, சோளம் தனித்தனியாக
மாவாக அரைத்து அல்லது
இவை எல்லாம் கலந்த
ரெடிமேட் மாவு – 2 கப்,
நாட்டுச்சர்க்கரை – 1 கப்,
சூடான பால் – 1 கப்,
நெய் – 1 கப்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
உடைத்த முந்திரி – சிறிது

எப்படிச் செய்வது?

அடிகனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு மாவை லேசாக பொன்னிறமாக நெய் பிரிந்து வரும் வரை வறுக்கவும். இத்துடன் பதப்படுத்திய சுத்தமான நாட்டுச்சர்க்கரை, கெட்டியான பால், முந்திரி சேர்த்து நன்றாக கிளறவும். மிதமான தீயில் கைவிடாமல் கிளறிக் கொண்டே, இடை இடையே நெய் விடவும். இது சிறிது சுருண்டு வரும் போது ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து இறக்கி நெய் தடவிய தட்டில் ஊற்றி ஆறிய பின் வில்லைகளாக வெட்டவும்.

Related posts

தீபாவளி ரெசிபி வேர்க்கடலை லட்டு

nathan

பலாப்பழ பாயாசம்

nathan

கேரட் போண்டா

nathan

சுவையான இனிப்பு போளி

nathan

கோன் சாக்லெட் ஃபில்லிங்

nathan

மைசூர் பாகு செய்ய.!!

nathan

தயிர் சேமியா செய்வது எப்படி?….

sangika

பால் பணியாரம்

nathan

சத்தான பீட்ருட் ஹல்வா.!!

nathan