37.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
201610131431405672 how to make rasmalai SECVPF
இனிப்பு வகைகள்

தித்திப்பான ரசமலாய் செய்வது எப்படி

குழந்தைகளுக்கு ரசமலாய் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் இதனை செய்யலாம்.

தித்திப்பான ரசமலாய் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பால் – 3 லிட்டர்
சர்க்கரை – 3 கப்
தண்ணீர் – 4 கப்
குங்குமப் பூ – சிறிது
ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
பாதாம், முந்திரி, பிஸ்தா – 3 டேபிஸ் ஸ்பூன்

செய்முறை :

* பாதாம், பிஸ்தா, முந்திரி முதலியவற்றை சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.

* 1 லிட்டர் பாலைக் கொதிக்க வைத்து அரை லிட்டர் அளவுக்கு சுண்ட வைக்கவும்.

* அந்த பாலில் 1 கப் சர்க்கரை, குங்குமப் பூ, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். சர்க்கரை கரைந்ததும் 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.

* மீதியுள்ள 2 லிட்டர் பாலை கொதிக்க வைத்து கொதிக்கும் போது எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு கலந்தவுடன் பால் திரிந்து விடும். திரிந்த பாலை ஒரு காட்டன் துணியில் மூட்டை கட்டி தண்ணீர் வடியும் படி வைக்கவும்.

* தண்ணீர் எல்லாம் நன்றாக வடிந்த பின் அந்த மூட்டையில் உள்ள கலவையை ஒரு தட்டில் கொட்டி உள்ளங்கையால் மென்மையாக அழுத்தி பிசையவும்.

* பின்னர் அந்த மாவை சிறு சிறு வடை போல தட்டிக் கொள்ளவும்.

* அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மீதியுள்ள 2 கப் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

* கொதிக்கும் போது வடை போல் தட்டி வைத்திருக்கும் பன்னீரை சர்க்கரைப் பாகில் போட வேண்டும். அடுப்பை மிதமான தீயில்வைக்க வேண்டும். அரை மணி நேரத்தில் போட்ட வடைகள் உப்பி, பெரிதாகி விடும்.

* இப்போது இந்த வடைகளை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பாலில் போட வேண்டும்.

* ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.

* தித்திப்பான ரசமலாய் ரெடி.201610131431405672 how to make rasmalai SECVPF

Related posts

கருப்பட்டி வட்டிலப்பம்/ Jaggery Wattalappam recipe in tamil

nathan

பூந்தி செய்வது எப்படி ??? tamil cooking

nathan

தேங்காய் பர்பி

nathan

30 வகை ஈஸி ரெசிபி!.

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான கிவி சாக்லேட் லாலி பாப்

nathan

சுவையான ஜவ்வரிசி போண்டா!! செய்வது எப்படி!!

nathan

வெல்ல அதிரசம்

nathan

சுவையான அவல் கேசரி- ருசியாக செய்யும் எளிய முறை

nathan

பனை ஓலை கொழுக்கட்டை

nathan