201609081115084961 vegetable noodle soup SECVPF
சூப் வகைகள்

சுவையான சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்

வெஜிடபிள் நூடுல்ஸ் சூப் மிகவும் சத்தானது, சுவையானது. இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்
தேவையான பொருட்கள் :

நறுக்கிய காய்கறிகள் – அரை கப் ( விருப்பான காய்கறிகள்)
கோதுமை நூடுல்ஸ் – 50 கிராம்
வெங்காயம் – ஒன்று,
மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப,
பூண்டு – ஒரு பல்,
வெங்காயத்தாள் – 3
கொத்தமல்லி தழை – சிறிதளவு,
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

* வெங்காயம், பூண்டு, வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சோளமாவை சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி வைக்கவும்.

* நறுக்கிய காய்கறிகள் எல்லாம் ஒன்றாக சேர்த்து வேக வைத்து, வேக வைத்த தண்ணீர் 4 கப் எடுத்துக் வைத்துக்கொள்ளவும்.

* நூடுல்ஸ் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் பூண்டை போட்டு வதக்கிய பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி காய்கறி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, நன்கு கொதி வந்தவுடன், உப்பு, மிளகுத்தூள், வேக வைத்த காய்கறி, வேக வைத்த நூடுல்ஸ் சேர்த்து 7 நிமிடம் கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி, கொதி வந்தவுடன் கொத்தமல்லி தழை, சோயா சாஸ், வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்.

* சுவையான சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப் ரெடி.

* குழந்தைகள் இந்த சூப்பை விரும்பி குடிப்பார்கள்.201609081115084961 vegetable noodle soup SECVPF

Related posts

தேங்காய் – வேர்க்கடலை சூப்

nathan

மனத்தக்காளி கீரை தேங்காய்பால் சூப்

nathan

இனிப்பு சோளம் சூப்

nathan

சத்தான முளைகட்டிய நவதானிய சூப்

nathan

பட்டாணி சூப்

nathan

முருங்கை பூ சூப்

nathan

முட்டைக்கோஸ் சூப்

nathan

ப்ரோக்கலி சூப்

nathan

ஆப்பிள் – மிளகு சூப்

nathan